உலகில் சில பொருட்கள் நம்பமுடியாத விலையில் இருக்கும் காரணம் அவைகள் செயற்கையாக செய்வதால் ஆகும் செலவு. ஆனால் சில வீடு பிராணிகளும் வளர்ப்பு மிருகங்களுக்கும் மதிப்பு நீங்கள் நம்ப முடியாத அளவில் உள்ளது. அப்படி உலகெங்கிலும் உள்ள மிக விலை உயர்ந்த 5 விலங்குகளை பற்றி தெரிந்து கொள்வோம்
1. கிரீன் மங்கி 108 கோடி
கிரீன் மங்கி என்றதும் குரங்கு என நினைத்துருப்பீர்கள். ஆனால் இது குதிரைகளில் மிகவும் அழகான வேகமாக ஓடும் குதிரை .
இது 2009 ஆம் ஆண்டில் ஒரு ஏலத்தில் 16,000,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு கலப்பினப் பந்தயக் குதிரை ஆகும். முதல் முறை இந்தப் கிரீன் மங்கி பந்தயத்தில் விடப்பட்ட போது, வெறும் 9.8 விநாடிகளில் இது எட்டு மைல்களை ஓடிக் கடந்தது.
2. மிஸ்ஸி பசு 9 கோடி
இந்த வகை பசுக்கள் கோடிகள் கொடுத்து வாங்கப்படுகின்றன. ஏனென்றால் மிஸ்ஸி பசு அதிகப் பால் உற்பத்திக்குப் புகழ்பெற்ற ஹோல்ஸ்டன் இன பசுக்களிலிருந்து வந்ததாகும். 2009 ஆம் ஆண்டில் இதனுடைய பால் உற்பத்தியைக் காட்டிலும் அதன் கருமுட்டைக்காக, அதைக் கொண்டு அதே போன்ற இனத்தை அதிகம் உருவாக்கி அதன் மூலம் அதிவேகமாகப் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் 1,200,000 அமெரிக்க டாலர்கள் விலைக்கு ஒரு கனடா முதலீட்டாளர்களால் இந்த பசு வாங்கப்பட்டது.
3. திபெத்திய மஸ்தீப் 4 கோடி
உலகின் மிகப்பெரிய வகை நாய்களான திபெத்திய மஸ்தீப் தொடக்கத்தில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகப் பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. உண்மையான வம்சாவளி திபெத்திய மஸ்திஃப் நாய்கள் மிக அரிதானவை மேலும் 2011 ஆம் ஆண்டில் கடைசித் திபெத்திய மஸ்திஃப் மிகப் பெரிய தொகையான 582,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. செல்லப்பிராணிகளை நேசிக்கும் பணக்காரர்கள் எவ்வளவு விலை கொடுத்ததும் இந்த வகை நாயை வாங்க விரும்புவார்கள்.
4. சர் லான்ஸ்லெட், 1 கோடி
இந்த லாப்ரடார் வகை நாயின் விலை மிகவும் அதிகம் ஏனென்றால், இது இயற்கையாகப் பிறந்ததல்ல மரபணு முறைப்படி குளோனிங் செய்யப்பட்டது. சர் லான்ஸ்லெட் என்று பெயரிடப்பட்ட இது லாப்ரடார் நாயிடமிருந்து மரபணு முறையில் க்ளோனிங் செய்யப்பட்டது. சுமார் 11 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த இது துரதிருஷ்டவசமாகப் புற்றுநோயால் தாக்கப்பட்டு இறந்து விட்டது.
5. வெள்ளை சிங்க குட்டிகள் 94 லட்சம்
இந்த சிங்கக்குட்டிகள் இவ்வளவு விலைக்கு காரணம் மிகவும் அரிய இனம் அதன் வெள்ளை நிறம் மற்றும் அதனுடைய அழகான கண்களுக்கு. தென்னாப்பிரிக்க காடுகளில் இது காணப்படுகிறது மிகவும் அரிதான அழிந்து வரும் நிலையில் உள்ள விலங்குகள் இது. உலகெங்கிலும் 300 க்கும் குறைவாகவே இவை காணப்படுகின்றன.