January 31, 2023
ஆன்மீகம்

இந்தியாவில் உள்ள உயரமான 10 கோவில் கோபுரங்கள்

இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் மிக சிறப்பு வாய்ந்தவை. சிறந்த கட்டிடக்கலைக்கு இவைகள் எடுத்துக்காட்டு. கோவில்களில் கோபுரங்கள் மிகவும் முக்கியமானது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்னும் சொல் வழக்கமும் உண்டு. கோ என்றால் இறைவன், புரம் என்றால் இருப்பிடம். இறைவன் இருக்கும் இருப்பிடமே கோபுரம். அதனால் கோவில்களில் உள்ள கோபுரத்திற்கு மிகச்சிறப்பு உண்டு. இந்த கோபுரங்கள் மிக நேர்த்தியாக கலை நுணுக்கத்துடன் மிக பிரமாண்டமாக மிகவும் உயரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோபுரங்களில் மிகவும் உயரமான முதல் 10 கோபுரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்

1.முருதேஸ்வரர் கோயில், 249 அடி

முருதேஸ்வரர் கோயில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்.இங்கு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சிவன் சிலை உள்ளது. இது 249 அடி உயரத்தில் 20 அடுக்கு கோபுரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மிக உயரமான கோபுரமாக உள்ளது. இது கர்நாடகா மாநிலத்தில் பட்கல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது

2. ரங்கநாதசுவாமி கோவில் 239.5 அடி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதஸ்வாமி கோயில் தென்னிந்தியாவின் வைஷ்ணவ கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது, 108 திவ்ய தேசங்களில் ஒன்று ரங்கநாதஸ்வாமி கோவிலின் கோயில் கோபுரம் 239.5 அடி உயரத்தில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரம் ஆகும்.

3. அண்ணாமலையார் கோவில் 216.5 அடி
திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இராஜ கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். இதனால் தமிழகத்தின் இரண்டாவது உயர்ந்த கோபுரம் என்ற பெருமை பெற்றுள்ளது. இக்கோபுரம் 11 நிலைகளைக் கொண்டதாகும். இதன் அடிப்பகுதி 135 அடி நீளமும், 98 அடி அகலமும் உடையதாக இருக்கிறது. 4 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள்., கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

4.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 193.5 அடி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.
இது 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது.

5. உலகளந்த பெருமாள் கோவில்,திருக்கோவிலூர்,விழுப்புரம் 192 அடி

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.192 அடி உயரத்தில், உக்கலந்த பெருமாள் கோயில் கோபுரம் உள்ளது

6. ஏகாம்பரேஸ்வரர் கோயில் 190 அடி

திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். கோவிலின் கோபுரம் 190 அடி உயரமுடையது.

7.அழகர் கோவில்,மதுரை 187 அடி

அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இந்த கோவில் கோபுரத்தின் உயரம் 187 அடிகள்.

8. மீனாட்சி அம்மன் மோவில், மதுரை 170அடி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
கோயிலின் வடக்கு கோபுரம் 170 அடி உயரம் உடையது

9. சாரங்கபாணி கோவில் கும்பகோணம் 164 அடி

சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இதன் ராஜகோபுரம் 164 அடி உயரம் உடையது

10. ராஜகோபாலசுவாமி கோவில் 154 அடி

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் ஒரு வைணவக் கோயில் ஆகும். இந்த கோயில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. ராஜ கோபுரம் 154 அடி உயரம் கொண்டது

Related posts

Leave a Comment