நம்முடைய பூமியில் ஏராளமான விஷயங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கூடிய ஒவ்வொரு விஷயங்களும் நம்மை மலைப்புக்குள்ளாக்குகிறது. அப்படி 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பழமையான இதயம் இதுதான். இந்த இதயம் ஒரு பழங்கால தாடை மீனிற்கு சொந்தமான புதை படிவம். கூடவே இந்த மீனின் வயிறு, குடல், கல்லீரல் ஆகியவை புதைப்படிவமாக கிடைத்துள்ளது. இது பரிணாம வளர்ச்சியில் புதிய தகவல்களை நமக்கு சொல்லும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
அறிவியலில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆராய்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்ட தாடை மீனின் உடலில் உள்ள உறுப்புகளின் நிலை 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 358.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை டெவோனியன் காலத்தில் செழித்து வளர்ந்த கவச மீன்களின் அழிந்துபோன வகைக்கு ஒத்ததாக உள்ளது.
கர்டின்ஸ் ஸ்கூல் ஆஃப் மாலிகுலர் அண்ட் லைஃப் சயின்சஸ் மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் ஜான் கர்டின் மற்றும் பேராசிரியர் கேட் டிரினாஜ்ஸ்டிக் கூறுகையில், பண்டைய உயிரினங்களின் மென்மையான திசுக்கள் அரிதாகவே பாதுகாக்கப்படுகின்றன. மேலும் முப்பரிமாண பாதுகாப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக புதைபடிவங்களை ஆய்வு செய்த ஒரு பழங்கால ஆராய்ச்சியாளர் என்ற முறையில் 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான முப்பரிமான முறையில் அழகாக பாதுகாக்கப்பட்ட இதயத்தை பார்க்க உண்மையில் ஆச்சரியமாக இருந்தது என சொல்லியுள்ளார்.
இந்த மீன்களின் இதயம் அதனுடைய வாயின் அருகிலும் செவுள்களின் கீழும் காணப்படுகிறது சுறாக்களை போல. முதன்முறையாக ஒரு பழமையான தாடை மீனில் அனைத்து உறுப்புகளையும் ஒன்றாகக் காணமுடிந்தது. மிக முக்கியமாக இதனுடைய கல்லீரல் மிகப்பெரியதாக இருந்தது.
380 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த இதயம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அந்த காலத்தில் விலங்குகள் எந்த அளவிற்கு பரிணாம வளர்ச்சியை அடைந்து இருந்தது என்பதை பற்றி இன்னும் பல தகவல்கள் நமக்கு தெரியும் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.