May 30, 2020
தகவல்

இந்தியாவில் 4000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டுபிடிப்பு !!

கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் 4000 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. எகிப்தில் பண்டைய காலத்தில் இறந்த முன்னோர்களின் உடல்களை பதப்படுத்தி வருவது அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

எகிப்து நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி முக்கோண வடிவில் கல்லறை ஒன்று எழுப்புவார்கள். அதன் பெயர் பிரமிடு. அந்த பிரமிடுக்குள் இருக்கும் சடலங்களை மம்மி என அழைப்பார்கள்.

இந்நிலையில் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மம்மி ஒன்று, கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ராணியா அகமது என்ற எகிப்திய பெண் ஒருவர் இந்த மம்மியை ஆராய வந்தார்.

ஆய்வுக்குப் பிறகு அவர் அளித்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில பகுதி சிதைந்தும் சேதம் அடைந்தும் உள்ளதாக தெரிவித்த அவர் அதை சரி செய்ய வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால் ‘மம்மி’ மீது பூஞ்சைகள் வளரவும், ஈரத்தன்மை மிகவும் குறைந்தால் ‘மம்மி’யின் பாகங்கள் கீறவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ஈரத்தன்மையை 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வைக்கும்படியும் யோசனை தெரிவித்துள்ளார். இதன் பிறகு இந்த மம்மியை மிகவும் பாதுகாத்து வருகின்றனர்.

மம்மியின் அளவீடுகள் பரிசோதனையின் போது எடுக்கப்பட்டன மற்றும் மம்மியின் நீளம் சுமார் 162.5 செ.மீ மற்றும் சவப்பெட்டியுடன் 198.5 செ.மீ. மம்மி வம்சத்தின் பெயர் தெரியவில்லை.

முகத்தின் மேல் கிடந்த மாஸ்க் அகற்றப்பட்ட பின் ஆய்வின் படி இது ஆண் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மம்மி ஏறத்தாழ சுமார் 4,000 ஆண்டுகள் பழமையானது என்று நிபுணர் அறிக்கை கூறுகிறது.

மேலும் இது குறித்து அருங்காட்சியக இயக்குனர் கூறியதாவது:

நிபுணர் ராணியா அகமதின் ஆலோசனைக்கு பிறகு மம்மியை கூடுதல் கவனத்தோடு பாதுகாத்து வருகிறோம். இதை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது. ஆகவே அதனை தவிர்க்க காற்று புகாத அறையில் வைத்துள்ளோம் என கூறினார்.

மேலும் பெட்டியின் ஈரத்தனமையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும், நிறம் மங்காமல் இருக்க குறைவான ஒளியில் வைத்துள்ளதாகவும் கூறினார். சுமார் 4000 ஆண்டுகள் பழமையான மம்மியை பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடும் ஆர்வமாகவும் பார்த்து மகிழ்கின்றனர்.

Related posts

Leave a Comment