November 27, 2022
உடல்நலம்

குழந்தைகளின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள் !

தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அனைத்து குழந்தைகளும் தங்கள் நேரத்தை செலவழிக்க தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

அதையும் தாண்டி தற்போது பள்ளி பாடங்களை கூட ஆன்லைன் வழியாக தான் கற்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இதனால் குழந்தைகளின் கண்கள் மிகவும் பாதிக்கப்படும் என்பது தான் பல பெற்றோரின் கவலையாக உள்ளது.

இந்த கவலையை போக்க நீங்கள் கண்களை பாதுகாக்கும் சத்து மிகுந்த உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பது தான் சிறந்த வழி. ஆரோக்கியமான கண்களுக்கு உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய ஐந்து வகையான உணவு வகைகளை குறித்து இந்த பதிவில் பார்கலாம்.

சீஸ் மற்றும் முட்டை

குழந்தைகள் சீஸ் மற்றும் முட்டைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த இரண்டு உணவுகளும் வைட்டமின் ஏ நிறைந்தவை. மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் நிறைந்துள்ளது. இவை கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆகவே முட்டையை பயன்படுத்தி உங்கள் குழந்தைகள் விரும்பும் வண்ணம் வித்தியாசமான உணவுகளை தயாரித்து மேலே சிறிது சீஸ் சேர்த்து கொடுங்கள்.

மீன் மற்றும் சிப்ஸ்

சால்மன் மற்றும் மத்தி உள்ளிட்ட மீன்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளன. ஆகவே உங்கள் குழந்தை மீன் சாப்பிடுவதை விரும்பினால், அதை வெவ்வேறு விதங்களில் தயாரித்து, அவற்றின் கூடவே சிப்ஸ் சேர்த்து குழந்தைக்ளுக்கு சாப்பிட கொடுங்கள்.

சாக்லேட்

சாக்லேட்டுகளை விரும்பாத எந்தக் குழந்தையும் இல்லை. எனவே, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவை சாப்பிட செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அதை சாக்லேட்டுடன் சேர்த்து கொடுப்பது தான்.

பாதாமில் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது. ஆகவே உங்கள் குழந்தைகளுக்கு பாதாம் கலந்த உணவுகளை அதிகமாக கொடுங்கள். இதை நீங்கள் அவர்களின் காலை உணவு அல்லது பகலில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

காய்கறிகள்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களிலும் காய்கறிகள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கண்களுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது.

மேலும் ப்ரோக்கோலி, தக்காளி, இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற பொருள்களில் கூட வித்தியாசமான உணவுகளை தயாரித்து கொடுங்கள்.

பழங்கள்

பெரும்பாலான குழந்தைகள் மாம்பழம் மற்றும் முலாம் பழம் போன்ற கோடைகால பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்த பழங்களில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. ஆகவே,மற்ற பழ வகைகளுடன் உங்கள் குழந்தைகளுக்கு மாம்பழம் மற்றும் முலாம் பழம் கலந்து புருட் சாலட் செய்து கொடுங்கள்.

Related posts

Leave a Comment