November 27, 2022
தகவல்

வீணாக பணத்தை செலவழித்து ஆன்லைனில் வாங்கும் 6 பொருள்கள்!

ஆன்லைன் ஷாப்பிங் செய்வது அனைவருக்கும் பேஷனாகிவிட்டது. ஆன்லைனில் சில தரமான பொருள்கள் மற்றும் ஒரு சில தரமற்ற பொருள்களும் விற்பனைக்கு வருகின்றன. அந்தவகையில் மக்கள் ஆன்லைனில் வாங்கும் ஒரு சில தேவையில்லாத பொருட்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புனித நீர்(Holy water)


பொதுவாகவே புனித நீர் என்பது பாதிரியார்களால் ஆசீர்வாதம் செய்து தரப்படுவது. ஆனால் இப்போது புனித நீர் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளது. இது புனிதமானது என்பதற்கான சான்றிதழ்களும் இந்த நீருடன் வருகிறது. இந்த பொருட்கள் அமெரிக்காவில் விற்பனையாகிறது.

அணிந்து கொள்ளும் குடை(Wearable umbrella)


நாம் அதிக வெயில் இருந்தாலோ அல்லது மழை பெய்தாலோ குடை பயன்படுத்துவோம். பல நூற்றாண்டுகளாகவே மக்கள் கையில் பிடித்து செல்லும் குடையை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது தோளில் பைகளை அணிந்து செல்வது போன்று குடை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜாவ் எக்ஸஸைசர்(Jawzrsize)


உடற்பயிற்சி செய்வதை குறித்து கேள்வி பட்டிருப்பீர்கள். யாராவது வாய்க்கு பயற்சி கொடுப்பதை கேள்வி பட்டிருகீங்களா . ஆனால் வாய்க்கு பயிற்சி கொடுப்பதற்கு ஜாவ் எக்ஸஸைசர் என்று ஒரு தயாரிப்பு ஆன்லைனில் விற்பனையாகிறது. இதை நீங்கள் வாயில் வைத்து மெல்ல வேண்டுமாம் அது தான் பயிற்சியாம்.

பாக்கெட் (Pocket )


நாம் வெளியில் செல்லும் போதும் பொதுவாகவே பணம் மற்றும் செல்போனை, பாக்கெட்டில் வைப்போம். சிலர் பர்சில் வைத்து பாக்கெட்டில் வைப்பர். ஆனால் பாக்கெட்டே இல்லா துணிகள் உபயோகப்படுத்துகிறவர்களுக்காக பாக்கெட் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பாக்கெட்டை நீங்கள் எந்த உடை உடன் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

சிகரெட் லைட்டர்(Cigarette Lighter)


மொத்தமாக சிகரெட் வாங்கினால் பெட்டியில் வைத்து தான் கிடைக்கிறது. ஆனால் இதை வைப்பதற்கென்று தனியாக சிகரெட் ஹோல்டர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஹோல்டர் 10 சிகரெட்டை வைத்துக்கொள்ளும் அளவு கொண்டது.

இதில் கீழ் உள்ள பட்டனை அழுத்தினால் ஒரு சிகரெட் மட்டும் வெளியே வரும். இந்த லைட்டரில் முக்கியமானது என்னவென்றால் சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரும் இதனுடனேயே வருகிறது. இதன் விலையோ மிக அதிகம்.

ரேடியோ(Tape recorder )


பழைய காலத்து மக்களின் வீடுகளில் டேப் ரெக்கார்டர் இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. பாடல்கள், செய்திகள் என அனைத்தும் இந்த டேப் மூலமாக தான் கேட்டனர்.

ஆனால் இந்த நவீன காலத்தில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இன்றும் ஆன்லைனில் பழங்கால ரேடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் டேப்கள் விற்பனைக்கு உள்ளது.

Related posts

Leave a Comment