November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

சீனாவில் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க முகமூடி

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்க்ஸோகு நகரில் உள்ள பண்டைய பிரபு ஒருவரின் கல்லறையில் இருந்து 3,000 ஆண்டுகளுக்கும் மேலானதாக கருதப்படும் இறந்த பிறகு முகத்தில் அணியும் தங்கத்தாலான முகமூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான தங்கப் பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த தங்க முகமூடி 18.3 சென்டிமீட்டர் நீளமும் 14.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.

இது ஒருவருடைய முழு முகத்தையும் மறைக்கும் அளவுக்குப் பெரியது. இந்த தங்க முகமூடி 40 கிராம் எடை கொண்டது. இந்த தங்கு முகமூடி இறந்தவருடைய முகம் எப்பொழுதும் ஜொலித்துக்கொண்டிருக்கும் வண்ணத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்.

மேலும் அவருடைய ஆன்மாவை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் அந்த காலத்தில் இப்படி செய்யப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிரபுவின் கல்லறை ஷாங் வம்சத்தைச் சேர்ந்தது.

இந்த வம்சம் மஞ்சள் நதி பள்ளத்தாக்கில் கிமு 1600 முதல் கி.மு 1046 வரை ஆட்சி செய்தது. 108,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கல்லறையில் வெண்கலம் மற்றும் ஜேட் போன்ற அலங்கரிக்கப்பட்ட பொருட்கள், மது பாத்திரங்கள், புகைபிடிக்கும் குழாய்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பிற கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

3000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தங்கம் வெகு தொலைவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது ஷாங் காலத்தில் மஞ்சள் நதி பள்ளத்தாக்கு மற்றும் யாங்சே நதி பள்ளத்தாக்கு போன்ற தங்கம் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு இடையே வர்த்தக அமைப்பு இருந்ததை சொல்கிறது.

Related posts

Leave a Comment