November 30, 2022
செல்வம்

செல்வத்தை அதிக அளவு கொண்டுவரும் வசம்பு மூட்டை

நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை தொடர்ந்து செய்து வரும் பொழுது அதிக அளவு பணம் உங்களிடம் வந்து சேரும்.

வசம்பு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அதன் அதிசயங்களை தெரிந்தவர்கள் பலருண்டு. வசம்பு செல்வத்தை அதிக அளவு ஈர்க்கும் சக்தி கொண்டது. வசம்பை சுயம்பு என சொல்லலாம். அதாவது சிவபெருமானுடைய ஒரு அம்சம் என கூட சொல்லலாம். மும்மூர்த்திகளும் இணைந்த ஒரு மூலிகை என்று கூட இந்த வசம்பை சொல்லலாம். ஏனென்றால் இந்த வசம்பிற்கு அதிக அளவு நன்மைகளைத் தரக்கூடிய ஏராளமான சக்திகள் அதனிடம் உண்டு.

இந்த வசம்பு செல்வத்தை நமக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல் இன்னும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யும் சக்தி கொண்டது. மிக முக்கியமாக கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடிய சக்தி கொண்டது இந்த வசம்பு. ஒரு சில குழந்தைகளுக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகும். உடல்நிலை சரி இல்லாமல் போகக்கூடிய குழந்தைகளுக்கு இந்த வசம்பை இடுப்பில் கட்டி விட வேண்டும்.

இப்படி நீங்கள் செய்யும் பொழுது அவர்களுடைய உடம்பு ஒரு சில நாட்களிலேயே சரியாக தொடங்கிவிடும். ஒரு துண்டு வசம்பை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் பிறகு நெய் தீபம் ஏற்றி இந்த வசம்பை அதில் நன்றாக சுட வேண்டும். வசம்பு நன்றாக கருகி வரும்வரைக்கும் அதை நன்றாக நெய் தீபத்தில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும். கண்டிப்பாக நெய்தீபம் மட்டுமே இதற்கு பயன்படுத்த வேண்டும்.

வேறு எந்த தீபத்தையும் பயன்படுத்தக்கூடாது. இந்த வசம்பை பொடி செய்து எடுக்கும் அளவிற்கு நன்றாக கருக செய்து எடுக்க வேண்டும். நன்றாக சுட்டு எடுத்த பிறகு இதைப் பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வசம்பை பொடியாக்கி எடுத்தபிறகு அதே அளவிற்கு கல் உப்பையும், கற்பூரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒரே அளவிற்கு எடுத்து இதை நன்றாக கலக்குங்கள்.

இந்த மூன்று பொருளும் நன்றாக ஒன்றோடு ஒன்று சேர வேண்டும். அதன் பிறகு ஒரு வெள்ளை காட்டன் துணியை எடுத்து அதில் இந்த பொடியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிறு சிறு மூட்டைகளாக இதை கட்டிக்கொள்ளுங்கள். இதில் ஒரு மூட்டையை நீங்கள் நகையை வைத்து இருக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும். இன்னொரு மூட்டையை பணம் வைத்திருக்கக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும்.

இன்னொரு மூட்டையை வெள்ளி வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். ஏன் இதை தனித்தனியாக வைக்க வேண்டுமென்றால் நகை இருக்கும் இடத்தில் பணத்தை வைக்கக்கூடாது. பணம் இருக்கும் இடத்தில் நகையை வைக்கக்கூடாது. அதுபோல வெள்ளி இருக்கும் இடத்தில் இந்த நகையோ, பணமோ சேர்த்து வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

அதன் கூட இந்த மூட்டையையும் சேர்த்து வைக்க வேண்டும். நாம் இந்த நகை மற்றும் பணத்தை பீரோவில் தான் வைப்போம். அப்படி பீரோவில் வைக்கும்போது அவைகளை சேர்த்து வைப்போம். அப்படி செய்யக்கூடாது. இவைகளை தனித்தனியாக வைக்க வேண்டும்.

Related posts

Leave a Comment