September 28, 2022
பரிகாரம்

ஐந்து ரூபாய் நாணயம் பரிகாரம் கோடிக்கணக்கான செல்வம் வந்து சேரும்

இப்போ பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை பணம். தேவைக்கு பணம் இல்லாமல் பலரும் இன்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாமல் அவர்களுடைய தினசரி செயல்களை கூட செய்ய முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது நோய் நொடி ஏற்பட்டால் கூட கையில் பணம் இல்லாமல் மருத்துவம் பார்க்காமல் பலரும் இருந்து வருகிறார்கள்.

எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணம் கையில் தேங்குவதில்லை. ஏதாவது ஒரு வழியில் வெளியில் பணம் சென்று கொண்டே இருக்கிறது. இப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அற்புதமான பரிகார முறை இது. எளிய முறையில் நீங்கள் இதை செய்து வந்தால் மிகப்பெரிய அளவில் உங்களிடம் செல்வம் வந்து சேரும். இந்த வழிமுறையை நீங்கள் உங்களுடைய வீட்டில் செய்த வரும்பொழுது பணப்புழக்கம் மிக அதிக அளவில் இருக்கும்.

கடன் தொல்லைகள் எல்லாம் மிக வேகமாக மாறத் தொடங்கும். உங்க வீட்டில் மட்டும் இல்லாமல் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் கூட பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். முதலில் ஒரு வெற்றிலையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெற்றிலையின் மீது 5 ஏலக்காய் எடுத்து உங்களுடைய குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அந்த வெற்றிலை மீது வையுங்கள். ஏலக்காய் செல்வத்தை மிக அதிகமாக ஈர்க்கக்கூடியது.

ஏலக்காயை நாம் இப்படி வைக்கும் பொழுது அதிக செல்வம் நம்மை வந்தடையும். வெற்றிலையின் மீது ஏலக்காயை வைத்த பிறகு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வெற்றிலையின் மீது வையுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தபிறகு அந்த வெற்றிலையை நன்றாக மடித்துக் கொள்ளுங்கள். மடித்த வெற்றிலையை ஒரு பச்சை நிற நூலை கொண்டு நன்றாக கட்டிக் கொள்ளுங்கள்.

இந்த வெற்றிலை பொதியை நீங்கள் அப்படியே எடுத்துக்கொண்டு போய் எங்கு நீங்கள் பணம் வைப்பீர்களோ அந்த இடத்தில் வைத்து விடுங்கள். அது போல நீங்கள் வியாபாரம் செய்யும் இடம் என்றால் வியாபாரம் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். செய்யும் பொழுது மனதில் என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமாக திருப்தியோடு இருப்பதற்கான பணம் என்னிடம் வந்து சேர வேண்டும் என மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மிக நம்பிக்கையோடு நீங்கள் மனதில் நினைத்து இந்த காரியத்தை செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இது எளிய வழிமுறை ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது. பணக் கஷ்டத்தால் அவதிப்பட்டுக் கொண்டு வருபவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயம் மிகப்பெரிய அளவிலான பலன் உங்களுக்கு கிடைக்கும்.

Related posts

Leave a Comment