November 27, 2022
சமையல்

இல்லத்தரசிகள் ஒரு நிமிடத்தில் பிரட் ஹாப் பாயில் செய்வது எப்படி

காலையில் வேலைக்கு செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள்,
பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்கள் மிகவும் அவசர கோலத்தில்
இயங்குவார்கள். அடித்து பிடித்து சரியான நேரத்தில் செல்வதற்கு
ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருக்கும். இதில்
வீட்டு வேலை மட்டும் செய்யும் பெண்களுக்கு கொஞ்சம்
பரவாயில்லை. ஆனால் வீட்டில் காலையில் எல்லா
வேலைகளையும் முடித்து அலுவலகத்திற்கும் செல்லும்
இல்லத்தரசிகளுக்கு அவர்கள் படும் பாடு சொல்லிமாளாது.
மிகவேகமாக காலையில் கணவர், பள்ளிக்கு செல்லும்
குழந்தைகளை அனுப்பிவிட்டு காலைஉணவை கூட சாப்பிட
நேரமில்லாமல் அலுவலகத்திற்கு செல்வார்கள். இதனால்
அவர்களுடைய உடல்நலம் மிகவேகமாக குறைய ஆரம்பிக்கும்.


உடல் சோர்வுற ஆரம்பிக்கும். இப்படி காலையில் சாப்பிட
நேரமில்லாமல் செல்லும் இல்லத்தரசிகள் 1 நிமிடத்திலேயே
ஒரு அற்புதமான பிரேக் பாஸ்ட் செய்து சாப்பிடலாம். உடலுக்கும்
ஆரோக்கியம் அளிக்கும். அந்த காலை உணவு பிரட் ஹாப் பாயில்.
இந்த பிரட் ஹாப் பாயில் ஐ நீங்கள் காலையில் அவசரகதியில்
இருந்தாலும் ஒரே நிமிடத்தில் செய்து சாப்பிடலாம். இதனால்
காலை உணவை தவிர்ப்பதை தடுக்கலாம். இதை நீங்கள் மிகவும்
எளிதில் செய்யலாம் ஒரே நிமிடத்தில்.

இதற்கு தேவையான பொருட்கள்
முட்டை 1,
பிரட் 2 துண்டுகள்,
உப்பு,
மிளகு.

முதலில் தோசைக்கல்லை சூடாக்கி முட்டையை உடைத்து விட்டு
ஹாப் பாயில் செய்து கொள்ளுங்கள். அதில் தேவையான
அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். சிறிது மிளகு சேர்த்து
கொள்ளுங்கள் ஹாப் பாயில் ரெடி ஆனதும் ஒரு பிரட் துண்டில்
ஹாப் பாயிலை வைத்து இன்னொரு பிரட்டை வைத்து
மூடி விடுங்கள். பிரட் ஹாப் பாயில் ரெடி. உடனடியாக
சுவைத்து மகிழலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.


கூடவே நல்ல எனர்ஜியை தந்து பசியை போக்கும்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி
சாப்பிடுவார்கள். 1 நிமிடத்தில் பிரட் ஹாப் பாயில்
செய்து அசத்துங்கள்.
செய்முறை வீடியோ கீழே உள்ளது
பார்த்து மகிழுங்கள்.

Related posts

Leave a Comment