சென்னையை சேர்ந்த “ஈவோசெப்”(evochef) எனும் நிறுவனம் மெல்லிய மொறு மொறு தோசை முதல் பஞ்சுபோன்ற ஊத்தப்பம் வரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படிபட்ட தோசையை சுட்டுத்தரும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
இட்லி, தோசை நல்ல சுவையாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு மாவு நல்ல நைசாக இருக்க வேண்டும். அப்போது தான் இட்லி மிருதுவாகவும், தோசை முருகலாகவும் வரும். அப்படி இருந்தால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
இட்லியை ஈசியாக சுடுபவர்கள் கூட, தோசையை சரியாக சுட முடிவதில்லை. இந்நிலையில் தோசை இயந்திரத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பார்த்தி ருப்பார்கள். சென்னையை சேர்ந்த “ஈவோசெப்”(evochef)என்ற நிறுவனம் தான் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
மெல்லிய மொறு மொறு தோசை முதல் பஞ்சுபோன்ற ஊத்தப்பம் வரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படிபட்ட தோசையை சுட்டுத்தரும் கருவியை உருவாக்கி யுள்ளனர். ஒரு பிரிண்டர் எப்படி அழகாக ஜெராக்ஸ் அடித்து தருகிறதோ, அதேபோல தோசையை மொறு மொறுவென்று தருகிறது. இந்த கருவிக்கு “ஈசி பிலிப்”(EC Flip) என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
இதில், அரிசி மாவு மட்டுமின்றி, கம்பு, சோளம், கோதுமை, ரவாதோசை, இரண்டு நிறம் , மூன்று நிற தோசை என்று வகை வகையாக சுட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் ஒரு பக்கத்தில் தோசை மாவை ஊற்றுகிறார். அதன்பிறகு தோசையின் தடிமன் எவ்வளவு இருக்க வேண்டும் என்ற அளவை தேர்ந்தெடுக்கிறார். பிறகு எத்தனை தோசை வேண்டும் என்ற எண்ணிக்கையையும் செட் செய்கிறார்.
பிறகு தானாகவே அத்தனை தோசையையும் அந்த இயந்திரம் தருகிறது. இதன் விலை எவ்வளவு தெரியுமா ரூ.15,999 ஆகும். இது அதிகமாக இருக்கிறது என்று கூறினாலும், விற்பனைக்கு வந்த பிறகு இதன் விலை குறையும் என்று கூறப்படுகிறது. இந்த இயந்திரம் எப்போது விற்பனைக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.