வேலைகள்

34 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!!!

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கல்வித் தகுதி : கால்நடை அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்

கூட்டமைப்பு – புதுக்கோட்டை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கால்நடை ஆலோசகர்

வயது வரம்பு : 1.7.2019 தேதியின்படி, விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.23,500 முதல் ரூ.34,500 வரையில்

மொத்த காலிப் பணியிடம் : 02

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், வரும் நவம்பர் 12 ஆம் தேதியன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

நேர்முகத் தேர்வின் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல் ஜெராக்ஸ், கல்விச்சான்றிதழ்கள், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை எடுத்து வர வேண்டும்.

THE PUDUKKOTTAI DISTRICT CO-OPERATIVE MILK PRODUCERS UNION LTD.,Kalyanaramapuram 1St street, Thirukokarnam, Pudukkottai-2

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/web/guest/employee-notification என்ற லிங்கில் பார்க்கவும்.

Related posts

Leave a Comment