செல்வம்

வாஸ்து சாஸ்திரப்படி இந்தக் கிழமை வீட்டிற்கு துடைப்பம் வாங்குங்க…! உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வரும்…!

வாஸ்து சாஸ்திரம் என்பது ஜோதிடத்தின் மற்றொரு பரிமாணமாகும். வாஸ்து சாஸ்திரம் வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்களைக் கட்டுப்படுத்துகிறது. வாஸ்து சரியாக இருந்தால் நேர்மறை, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் தானா வரும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி துடைப்பம் வாங்குவதற்கும், அதற்கான நாட்களும், வீட்டில் எங்கு வைப்பது என்பதற்கும் சில விதிகள் உள்ளன. துடைப்பம் லட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது.

தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் புதிய துடைப்பம் வாங்கி, பழையதை தூக்கி எறிவதுண்டு. இவ்வாறு செய்தால், வறுமை வீட்டை விட்டு வெளியேறும் என்றும் எதிர்மறை ஆற்றல் வீட்டில் தங்காது என்றும் நம்பப்படுகிறது. துடைப்பம் லட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுவதால், காலில் மிதிக்கக் கூடாது.

நீங்கள் வீட்டிற்கு புதிய துடைப்பம் வாங்க போகிறீர்கள் என்றால், வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவது முக்கியம்.

ஜோதிடர்களின் கூற்றுப்படி, வாஸ்து சாஸ்திரத்தில், சனிக்கிழமை துடைப்பம் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் வீட்டிற்கு துடைப்பம் வாங்குவது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

கிருஷ்ண பக்ஷத்தில் புதிய துடைப்பம் வாங்குவது சுபம். அதுவே, சுக்ல பக்ஷத்தில் இதை வாங்குவது துரதிருஷ்டமாக கருதப்படுகிறது.

Related posts

Leave a Comment