November 27, 2022
அழகு குறிப்புகள்

இயற்கையான இந்த பேஸ்ட்களை பயன்படுத்தினால் எளிதில் முகப்பருக்கள் மறையும்!

முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே நமக்கு மிகவும் அருவருப்பாக இருக்கும். இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் வருகிறது. அப்படி வந்தாலே முகத்தில் என்னென்னமோ போட்டு பருக்களை அகற்ற முயற்சிக்கிறோம். ஆனால் இந்த இயற்க்கை பேஸ்ட்களை போட்டாலே எளிமையாக போக்கலாம். அப்படி உடனடியாக முகப்பருக்களை நீக்க, சில வீட்டுக் பொருள்களை இங்கு பார்க்கலாம்.

புதினா பேஸ்ட் பயன்படுத்தினால் முகப்பரு மறையும் மற்றும் பாக்ட்டீரியாவை அழித்துவிடும். இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவுகிறது. புதினாவை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு பேஸ்ட் முகப்பருவை துரிதமாக குணப்படுத்தும். ஏனென்றால் தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை நீக்கக் கூடியது. இதற்க்கு பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

சமையல் சோடா முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது. இதனை போடும் போது உணர்திறன் அதிகரித்து எரிச்சல் மாறும். பருக்கள் வருவது குறையும்.

தேன் பேஸ்ட் போன்றவற்றை நிரந்தரமாக பயன்படுத்தினால் முகப்பருவை குணப்படுத்து வதுடன் தோலை பாதுகாத்து கொள்கிறது. இதற்கு பஞ்சை தேனில் நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் பருக்கள் முற்றிலும் மறைந்துவிடும்.

டூத்பேஸ்ட்டை முகப்பரு உள்ள இடத்தில் நேரடியாக அப்ளை செய்தால் முகப்பருவில் உள்ள கிருமிகள் மற்றும் நீரை உறிஞ்சி கூடுதலான எண்ணெய்யை உள்ளிழுத்து பருக்களை நீக்கும். பேஸ்டில் ஹைட்ரஜன் பராக்ஸைட் இருப்பதால், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள். பேஸ்ட் அப்ளை செய்யும் முன் ஐஸ் கட்டிகளை பருக்களில் வைத்து தேய்த்த பிறகு அப்ளை செய்யுங்கள்.

முகப்பரு இருக்கும் இடத்தில் வேப்பிலை, மஞ்சள் பயன்படுத்தினால் முகப்பருவின் வீக்கம் குறையும். ஆரஞ்சு தோல் கொண்டு முகப்பருவில் துடைத்தால் முகப்பரு வேகமாக ஆறிவிடும்.

Related posts

Leave a Comment