May 30, 2020
செய்திகள்

மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அரசு வழங்க வேண்டும்! நடிகர் கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அனைவரையும் உலகம் முழுவதும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் தொடர்ந்து இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் பல பிரபலங்களும் கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு ஆலோசனைகளையும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் பல்வேறு தகவல்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கமல்ஹாசன் இந்த கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கமலஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில் போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்கள் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்.

அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இந்த கரோனா வைரஸ் பாதிப்பில் மிகப்பெரிய அளவில் தங்கள் பணிகளைச் செய்யக்கூடிய மருத்துவ ஊழியர்களுக்கு முறையாக அவர்கள் கேட்கும் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக அரசு கொடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment