அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கேன்ல என்ன கொடுத்திருப்பார் நடிகர் பார்த்திபன்!!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனித்திரு, விழிப்புணர்ச்சியோடிரு, ஆரோக்கியத்துடனிரு என்று மக்களுக்கு அறிவுரை கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து தன்னுடைய பாராட்டுகளை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கடமையை செம்மையாக செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.

மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.

மேலும் பொக்கே கொடுப்பதற்கு பதிலாக சானிடைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *