தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் மிகவும் பிசியாக இருக்கக்கூடிய காரணத்தால் இன்ஸ்டாகிராமில் இதுவரைக்கும் அவர் அக்கவுண்ட் ஓபன் பண்ண வில்லை. முதல்முறையாக இப்பொழுது அவர் instagramல் புது அக்கௌன்ட் ஓபன் செய்திருக்கிறார்.
அவர் அக்கவுண்ட் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான பாலோவர்கள் அவரை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் அவர் அக்கௌன்ட் ஓபன் செய்து ஒரு படத்தை பதிவேற்றி இருக்கிறார். இதுவரைக்கும் அவரை 4.3 மில்லியன் பாலோவர்கள் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் இது பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.