September 28, 2022
செய்திகள்

இந்த மாநிலத்தில் 50 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யும் அதானி குழுமம்!! எதற்கு தெரியுமா?

ஆண்டுக்கு 4 மில்லியன் டன் திறன் கொண்ட ஒருங்கிணைந்த அலுமினியம் ஆக்சைடு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 30 மில்லியன் டன் இரும்புத்தாது மதிப்பு கூட்டல் திட்டம் ஆகியவற்றை தொடங்கவிருக்கும் அதானி குழுமத்தின் திட்டங்களுக்கு ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆணையம் வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பாக்சைட் மற்றும் இரும்பு தாது பாதிக்குமேல் ஒடிசாவில் உள்ளது. இந்த அலுமினியம் ஆக்சைடு சுத்திகரிப்பு நிலையம் பாக்சைட் அதிகம் எடுக்கப்படக்கூடிய சுரங்கங்களுக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது.

இந்த அலுமினியம் ஆக்சைடு சுத்திகரிப்பு நிலையம் உருக்கி எடுக்கும் தரமான அலுமினியம் ஆக்சைடை உற்பத்தி செய்யும். இதன் காரணமாக இந்தியா அலுமினியம் ஆக்சைடு இறக்குமதி செய்யும் அளவு குறையும்.

கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தியோஜரில் இரும்புத் தாது உற்பத்தி ஆலையும் அருகில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ராவில் பெல்லட் ஆலையும் அமைக்கப்பட உள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி சொல்லும்பொழுது ஒடிசாவில் நாங்கள் அதிக முதலீடுகளை செய்து வருகிறோம்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் ஆதரவு எப்பொழுதும் எங்களுக்கு இருக்கும் என நம்புகிறோம். அவருடைய இந்த ஆதரவுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

உலோகங்கள் நம்முடைய நாட்டிற்கு முக்கிய தேவையான ஒரு பொருள். இந்த திட்டங்கள் நம்முடைய தொலைநோக்கு பார்வையை நெருங்க உதவி செய்யும். இது ஆற்றல் மிகுந்த வணிகமாக இருப்பதால் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அருகாமையில் நாம் செல்கிறோம்.

இந்த முதலீடு 9,300 நேரடி வேலைகளை உருவாக்கும் என்றும் பல்லாயிரக்கணக்கான மறைமுக வேலை வாய்ப்புகளை மாநிலத்தில் திறக்கும் என்றும் அதானி கூறினார். இந்த திட்டங்களுக்காக அதானி குழுமம் ஒடிசா மாநிலத்தில் 57 ஆயிரம் கோடிக்கும் மேல் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் ஜூன் 30, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 223 சதவீதம் அதிகரித்து ₹ 41,066 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் (பிஏடி) 73 சதவீதம் அதிகரித்து ₹ 469 கோடியாக உள்ளது.

Related posts

Leave a Comment