September 28, 2022
செய்திகள்

அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் அனைத்தும் தள்ளுபடி…! அரசு அதிரடி அறிவிப்பு

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சில வருடங்களுக்கு முன்பு “ஒரு குழந்தை” விதி கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் பிறப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வந்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டு கடந்த ஆண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்துள்ளது. இந்நிலையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான தேசிய சுகாதார ஆணையம் கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இனப்பெருக்கு ஆரோக்கியத்திற்கான செலவினங்களை அதிகரிக்கவும் நாடு முழுவதும் குழந்தை பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு அறிவுறுத்துதல் வழங்கப்பட்டுள்ளது.

அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம், சிறிய குடும்பங்கள் மீது ஆர்வம் உள்ளிட்டவைகளே குழந்தை பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணங்களாகும். இதே காரணங்களால் கரு கலைப்பும் அதிகரித்து வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சீன அரசு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.

Related posts

Leave a Comment