November 27, 2022
செய்திகள்

நாகப்பாம்பை இரண்டே கடியில் கொன்ற 8 வயது சிறுவன்

அடிக்கடி இப்படிப்பட்ட விசித்திரமான நிகழ்வுகள் நடப்பதுண்டு. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். அதுவும் நாகப்பாம்பு என்றால் இன்னும் ஒரு படி மேல். இப்படிப்பட்ட அதிக விஷம் கொண்ட நாகப்பாம்பை 8 வயது சிறுவன் கடிக்க அந்த நாகப்பாம்பு இறந்துள்ளது. இந்த சம்பவம் நம்முடைய இந்தியாவில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பந்தர்பாத் என்னும் கிராமத்தில் உள்ள சிறுவன் தீபக். தன்னுடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அந்த இடத்தை கடந்து சென்ற நாகப்பாம்பு ஒன்று சிறுவனுடைய கையை சுற்றிக் கொண்டுள்ளது. அந்த சிறுவனை கடிக்கவும் செய்துள்ளது.

பாம்பு தன்னை சுற்றி இறுக்கியது ஒருபக்கம். கடித்தது ஒருபக்கம் என வலியோடு போராடிய அந்த சிறுவன் மிக ஆவேசமாக கையை அசைத்து நாகப் பாம்பிடம் இருந்து போராட முயன்றுள்ளான். நாகப்பாம்பு தொடர்ந்து தன்னை சுற்றி இறுக்கவே வேறுவழியில்லாமல் இரண்டு முறை நாகபாம்பை அந்த சிறுவன் கடித்துள்ளான்.

இவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்து முடிந்தது. உடனடியாக அந்த சிறுவனின் குடும்பத்தார் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். அந்த சிறுவனுக்கு பாம்பு எதிர்ப்பு விஷ மருந்து செலுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுவன் கடித்ததால் நாகப்பாம்பு இறந்துள்ளது.

சிறுவனை பாம்பு கடித்த பொழுது விஷத்தை செலுத்தவில்லை. கடிக்க மட்டுமே செய்துள்ளது. இந்த நாகப்பாம்பு சிறுவனை கடித்தும் விஷத்தை செலுத்தாதது மிகவும் வித்தியாசமான அரிதான ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

பொதுவாக விஷம் கொண்ட பாம்புகள் சாதாரணமாக கடிக்கும் பொழுது விஷத்தை செலுத்தாவிட்டாலும் அவைகளை துன்புறுத்தும் பொழுது நிச்சயம் விஷத்தை உடலில் செலுத்த முயலும். சிறுவன் பாம்பை கடித்த பிறகும் பாம்பு விஷத்தை சிறுவனின் உடலில் செலுத்தாதது விசித்திரமான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

அதுவும் இந்த வகை நாகப்பாம்புகள் மிகவும் விஷம் கொண்டவை. நம்முடைய இந்தியாவில் 60 வகையான அதிக விஷம் உள்ள பாம்புகள் உட்பட 300 வகையான பாம்புகள் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் பாம்பு கடித்து 12 லட்சம் மக்கள் இறந்துள்ளனர்.

Related posts

Leave a Comment