November 27, 2022
டிப்ஸ்

அனைவருக்கும் பயன்தரும் சில வீட்டுக்குறிப்புகள்

நாம் அனைவருக்குமே நம்முடைய வீடு எப்பொழுதுமே சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்பது தான் குடும்ப தலைவிகளின் அமோக ஆசை. இதற்காக நாம் பல வழி முறைகளை கையாண்டிருப்போம். என்றாலும் உங்களுடைய வீட்டு பொருட்கள் அலங்கோலமாகவே ஒழுங்கற்ற முறையில் காணப்படலாம். அவற்றை போக்க நீங்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1. வீட்டில் குளிர்சாதன பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வைத்தால் காய்கறி வாடாமல் இருக்கும்.

2. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டுவிட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டு நீலகிரித் தைலம் வீட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

3. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவத்தைத் தடுக்கலாம்.

4. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அவ்விடத்தில் சிறிதளவு பெருங்காயத் தூளை தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

5. எப்போதாவது உபயோகப்படுத்தும் ‘ஷூ’க்களில் ஒவ்வொரு ஷூவிலும் ரசகற்பூர உருண்டை போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

6. பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

8. காய்ந்த எலுமிச்சைத் தோல், ஆரஞ்சுத்தோல் இவற்றை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

9. வெள்ளிப் பாத்திரங்களையோ அல்லது வெள்ளி நகைகளையோ 1/2 மணி நேரம் புளித்த பாலில் ஊறப்போட்டு பின் கழுவினால் அவை புதியது போல் இருக்கும்.

10. வெயில் காலத்தில் எங்கு பார்த்தாலும் ஈக்கள் மொய்த்துக் கொண்டேயிருக்கும். அப்படியிருக்கும் பொழுது சிறிது உப்பை நீரில் சேர்த்து வீட்டை கழுவினால், காய்ந்த பின் வீட்டில் ஈக்கள் வராது.

11. வெங்காயம், பூண்டு போன்றவைகளை நறுக்கிய கத்தியில் ஏற்படும் நாற்றத்தை போக்க, கத்தியில் சிறிதளவு உப்பை தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

12. வீட்டு ஜன்னல்களுக்கு கரும்பச்சை மற்றும் கருநீலத்தினால் ஆன திரைசீலைகளை பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் வீட்டின் உள்ளே வராது.

13. மொசைக் தரை அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைசோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

14. வாஷ்பேசின் மங்கலாக இருந்தால், அதன்மீது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் தடவி, சிறிது நேரம் கழித்து, ஒரு சுத்தமான துணி அல்லது ஸ்பாஞ்சு கொண்டு துடைத்தால் வாஷ்பேசின் பளிச்சென்று ஆகிவிடும்.

15. உங்கள் கைவிரலில் போடப்பட்டிருக்கும் மோதிரம் இறுகி விட்டால் ஒன்றிரண்டு ஐஸ் கட்டிகளை விரலின் மேல் கொஞ்சம் நேரம் தேய்த்தால், விரல் வலியின்றி, மோதிரம் மெதுவாக கழன்று வரும்.

16. சீப்புகளின் இடுக்குகளில் அழுக்கு சேர்ந்திருந்தால், அதனை போக்க சிறிதளவு வெந்நீரில் 2 ஸ்பூன் உப்பு சேர்த்து அந்த உப்பு நீரில் சீப்புகளை போட்டு சிறிது நேரம் ஊற வைத்து விட்டு, பின் அலசி எடுத்தால் சீப்பு அழுக்கு நீங்கி சுத்தமாக காணப்படும்.

17. வாழைக்காயை பிரிட்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக வெட்டி வைத்தால் வாழைக்காய் கறுப்பாகாமல் புதியது போல் இருக்கும்.

18. சேப்பங்கிழங்கு ரோஸ்டு செய்யும்போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெயில் வறுத்துவிட்டு, கிழங்கைப் போட்டால் ரோஸ்ட் மொறுமொறுவென சுவையுடன் காணப்படும்.

19. கத்தி துருபிடித்திருந்தால் அந்த பகுதியை ஒரு சிறிய வெங்காயத் துண்டில் அழுத்தி தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து நன்றாக துடைத்தால் துரு மறைந்து போகும்.

20. பிளாஸ்கில் வரும் துர்நாற்றத்தைப் போக்க வெந்நீருடன் தயிரைக் கலந்து கழுவுங்கள். பிளாஸ்க் நாற்றம் நீங்கி வசீகரிக்கும்.

21. வாழைக்காய் வெட்டும்போது கைகளில் கறையாகும். இதனை தடுக்க கைகளில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து கொண்டால் கறை ஏற்படாது.

22. பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதிலாக பாத்திரம் கழுவும் பொடியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து தேய்த்தால் எண்ணெய் பிசுக்கள் மறைந்து பாத்திரம் பளபளப்பாக மாறிவிடும்.

23. மிக்சியை கழுவும்போது பல் தேய்க்கும் பிரெஷ்ஷில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் மிக்சி பளீரென்று இருக்கும்.

24. வெள்ளை துணிகள் நிறம் மங்கி காணப்பட்டால் வினிகர் கலந்த நீரில் அந்த துணிகளை ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

25. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும் தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்தால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

Related posts

Leave a Comment