உடல்நலம்

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்தால் இத்தனை நன்மைகளா…!?

தற்போது கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக கொளுத்த தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கவனித்து, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய உணவை நாம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், மோர் நம்முடைய ஊடலுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும் என்று சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பாலிலிருந்து கிடைக்கும் தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி தயாரிக்கப்படுவதுதான் மோர். இது தயிரைக் காட்டிலும் அதிகப் பலன் தருகிறது.

பொதுவாக கோடை காலத்தில் எல்லா வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். மோர் நம் உடலுக்கு உடலுக்கு குளிர்ச்சியையும், ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. மோர் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவாக வெயில் காலத்தில் நம்முடைய உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.

மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல. உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம் ஆகியவை தவிர்க்கப்படும்.

கோடை வெப்பத்தால் பல நேரங்களில் நம்முடைய கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கும். கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.

அதே போல் சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் மோர் தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை என்பது இப்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கோடையில் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் உடலில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மோர் அசிடிட்டிக்கு அரும்மருந்தாக செயல்படுகிறது.

கொஞ்சம் கல் உப்பு, கருப்புமிளகு, சீரகம் கலந்து மோரை குடித்து பாருங்கள். உங்கள் உடலில் அமிலத்தன்மை உடனே மறையும். ஆகவே தான் ஆண்களும் பெண்களும் மதியம் மோர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts

Leave a Comment