August 18, 2022
செய்திகள்

சுற்றுலா செல்ல போகிறீர்களா ? சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!

நம் நாட்டின் எழுபத்தி ஐந்தாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று முதல் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வரை தமிழக பாரம்பரிய இடங்களில் நுழைவு கட்டணம் இன்றி பார்வையாளர்களை இலவசமாக அனுமதிப்பதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவறைகளை பதினொன்று நாட்கள் சுற்றுலாப் பயணியர் நுழைவுக்கட்டணமின்றி சிற்பங்களை கண்டு ரசிக்கலாம்.

உலக பாரம்பரிய நாளான ஏப்ரல் பதினெட்டு, உலக பாரம்பரிய வார துவக்க நாளான நவம்பர் பத்தொன்பது ஆகிய நாட்களில் அனைவருக்கும் மற்றும் உலக பெண்கள் தினமான மார்ச் எட்டாம் தேதி பெண்களுக்கு மட்டும் என, ஒரு ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே இலவச அனுமதி உண்டு. ஆனால் முதல் முறையாக தொடர்ச்சியாக பதினொன்று நாட்கள் இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.

அரசின் இந்த உத்தரவு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment