முன்னனி நிறுவனமான ஸ்விகி ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கும் அதிக உணவை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியாவில் அனைத்தும் ஆன்லைன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி உணவு விற்பனையில் தொடங்கி டெலிவரி வரைக்குமே நம்மால் ஆன்லைனில் செய்துக்கொள்ள முடியும்.
முன்னனி நிறுவனமான ஸ்விகி ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கும் அதிக உணவை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் “சிக்கன் பிரியாணி” முதல் இடம் பிடித்துள்ளது.
ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி எனவும், சராசரியாக ஒரு வினாடிக்கு இரண்டு பேர் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும் கூறியுள்ளது. இந்த அளவுக்கு பிரியாணி விற்பனையானது, புதிய சாதனை எனவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.
மசால் தோசை, சிக்கன் பிரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா ஆகியவை அதிகம் ஈர்த்த உணவுகளில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதிகம் ஆர்டர் செய்த ஸ்னாக்ஸ் வரிசையில் “சமோசா” முதலிடம் பிடித்துள்ளது. ஒரு ஆண்டில் நாற்பது லட்சம் பேர் ஆன்லைனில் சமோசா ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விகி கூறியுள்ளது.
இந்த செய்தியால் பிரியாணி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்., ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை தமிழர்கள் மறந்து விட்டதாகவே தெரிகிறது. இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் பிரியாணியை நமது பாரம்பரிய உணவாக நினைக்க கூடும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.