இரண்டு நாள் பசியால் துடித்தவருக்கு ஆட்டோ ஓட்டுநர் செய்த காரியம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிக அளவில் ஏற்பட தொடங்கியதால் 144 தடை உத்தரவு தற்பொழுது போடப்பட்டுள்ளது.

இதனால் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை. இந்த நிலையில் பீகாரிலிருந்து கட்டுமான பணி செய்வதற்காக கேரளா வந்துள்ள இளைஞன் ஒருவர் ரயில்கள் அனைத்தும் ரத்தான காரணத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பாலக்காடு ஜங்ஷனில் சுற்றி திரிந்துள்ளார்.

கையில் காசு எதுவும் இல்லாத காரணத்தால் இரண்டு நாள்களாக பசியுடன் அலைந்துள்ளார். பசி காரணமாக அழுதபடியே இருந்துள்ளார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இவருடைய நிலையை பார்த்து உண்பதற்கு பழம் வாங்கி கொடுத்துள்ளார்.

பழம் கையில் கிடைத்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். இதுபோல உங்கள் அருகில் யாரும் இப்படி சாப்பாடில்லாமல் பசியால் இருப்பது கண்டால் ஏதாவது கொடுத்து பசியை ஆற்றுங்கள்.

கூடவே அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றுங்கள். முக்கியமாக யாரும் வெளியில் தேவையில்லாமல் எங்கும் செல்ல கூடாது. இப்படி நாம் தொடர்ந்து அரசு அறிவித்துள்ள 21 நாள்கள் வீட்டிலேயே இருந்தால் மட்டுமே நம்மை வைரஸ் பாதிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *