November 27, 2022
உடல்நலம்

ஆப்பிள் சீடர் வினிகர் குடிக்கும் பொழுது இந்த 6 தவறுகளை செய்யாதீர்கள்

சமீபத்திய ஒரு சில ஆண்டுகளாக மிக அதிக அளவில் பிரபலமாகி வரக்கூடிய ஒரு பானம் ஆப்பிள் சீடர் வினிகர். ஏராளமான மக்கள் இதனுடைய பல்வேறு நன்மைகளை தெரிந்து வைத்துக்கொண்டு அதை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மற்றும் தழும்புகளை குறைக்க உதவுகிறது இப்படி பல நன்மைகள் இருக்கிறது இருந்தாலும் ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையோடு கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென சுகாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது சரியாக அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிந்துகொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதை நீங்கள் உட்கொள்ளும் பொழுது ஒரு சில நேரங்களில் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும்.

முதலாவதாக ஆப்பிள் சீடர் வினிகரை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எந்த ஒரு பொருளையும் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஆப்பிள் சீடர் வினிகரை புதிதாக நீங்கள் குடிக்க ஆரம்பிக்கும் பொழுது அதிக அளவு அதை எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய உடலுக்கு எந்த அளவிற்கு அது நன்மை பயக்கும். இல்லை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ள இது உதவும். ஆப்பிள் சீடர் வினிகரை ஆரம்பத்தில் நீங்கள் குடிக்கும் பொழுது வயிற்று வலி அல்லது வயிறு எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதனுடைய அளவை குறைந்து பயன்படுத்த வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகரை குடித்த உடனேயே பல் துலக்கக் கூடாது. இது உங்களுடைய பற்களின் எனாமலை அரித்து விடும். இப்படி நீங்கள் செய்தால் இது பற்களில் துவாரங்கள் மற்றும் பல் சொத்தைக்கு வழிவகுக்கும். அதனால் ஆப்பிள் சீடர் வினிகரை குடித்த பிறகு 30 நிமிடங்கள் கழித்து பல்துலக்க வேண்டும்.

உணவு சாப்பிட்ட உடனே ஆப்பிள் சீடர் வினிகரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல என சொல்லப்படுகிறது. உண்மையில் இது உங்களுடைய செரிமான செயல்முறையை தாமதப்படுத்தும் என்று சொல்கிறார்கள். ஆப்பிள் சீடர் வினிகரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது அது ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கும். ஆனால் நீங்கள் உணவு உண்ட உடன் அதை குடித்தால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவு உண்ட பிறகு நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிக்க விரும்பினால் குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்க வேண்டும்.

ஒரு சிலர் ஆப்பிள் சீடர் வினிகரை முகர்ந்து பார்ப்பார்கள். இப்படி ஆப்பிள் சீடர் வினிகரை முகர்ந்து பார்க்கக் கூடாது. ஆப்பிள் சீடர் வினிகரை முகர்ந்து பார்த்தால் அது உங்களுடைய நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் நுரையீரலில் எரியும் உணர்வை ஏற்படுத்தும் என்பதால் அதை முகர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகரை வெறுமனே குடிக்க கூடாது. அப்படி குடிக்கும் பொழுது அது உங்களுடைய பற்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். தண்ணீரில் கலந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூட மிகவும் அமிலத்தன்மை கொண்டது. இப்படி எடுத்துக் கொள்வது உங்களுடைய எனாமலுக்கு தீங்கு விளைவிக்கும்.

இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னர் ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்கக்கூடாது. இப்படி ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் குடிக்கும் போது அது உணவுக் குழாய்க்கு தீங்கை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் குடிக்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகரை நீங்கள் நேரடியாக உங்களுடைய சருமத்தில் பயன்படுத்தக் கூடாது என சொல்கிறார்கள். இப்படி நீங்கள் பயன்படுத்தும் பொழுது அதனுடைய அமிலத்தன்மை காரணமாக தோலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மிக முக்கியமாக சிகிச்சை மேற்கொள்பவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்துவதற்கு முன்னர் உங்களுடைய மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனைப் பெற்று அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் என சுகாதார வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

Related posts

Leave a Comment