அழகு குறிப்புகள்

இந்த தீபாவளி பண்டிகைக் காலத்தில் இயற்கையாக ஒளிரும் முகத்தைப் பெற உதவும் அழகு குறிப்புகள்…!

அக்டோபர் மாதம் வந்து விட்டாலே அதன் பிறகு வரிசையாக தசரா, தீபாவளி என்று பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இந்த காலகட்டங்களில் பல்வேறு திருவிழாக்களிலும் விசேஷங்களிலும் கலந்து கொள்ளும் நாம், நம்முடைய முகத்தை பளிச்சென்று பளபளப்பாகவும் வைத்து கொள்ளவே விரும்புவோம்.

கடைகளில் கிடைக்கும் வேதி பொருட்கள் கலந்த அழகு சாதன பொருட்கள் பயன்படுத் தினாலும் அதனால் கிடைக்கும் பளபளப்பு சில மணி நேரத்தில் மறைந்து விடும். அதற்கு பதிலாக எளிதாக வீட்டிலே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் நம்முடைய முகத்தை பளிச்சிட வைக்கலாம்.

இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டிலேயே முகத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

பப்பாளி மற்றும் தேன்:

பப்பாளி பழத்தின் சதைகளை நான்கு டீஸ்பூன் அளவு எடுத்து குழைய வரும் அளவிற்கு நன்றாக அடிக்க வேண்டும்.

அதனுடன் இரண்டு டீஸ்பூன் தேன் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அது கெட்டியாகவும் இல்லாமல் அதிக நீர் தன்மையுடன் இல்லாமல் குறைவாக இருக்கும் படி சரியான விகிதத்தில் கலக்க வேண்டும்.

பின்னர் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இரண்டு மணி நேரத்திற்கு காய வைக்க வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து சூடான நீரைக் கொண்டு கழுவ வேண்டும்.

இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிப்பதுடன் பப்பாளியில் உள்ள என்சைம்கள் இயற்கையாகவே சருமத்தை பளிச்சென்று மாற்றுகின்றன.

குங்குமப்பூ மற்றும் பால்:

மூன்றிலிருந்து நான்கு டேபிள் ஸ்பூன் அளவு குளிர்ந்த பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டிலிருந்து மூன்று குங்குமப்பூ தழைகளை போட்டு ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு முப்பது நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

பின்பு அதனை முகத்தில் தடவி காய வைத்து விட வேண்டும்.

இப்படி ஒரு முறை அந்தப் பால் காய்ந்ததும் மறுமுறையும் அதேபோல செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

குங்குமப்பூ இயற்கையாகவே முகத்தை பளிச்சென்று மாற்றும் தன்மை உடையதாகவும், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் ஆனது இறந்த செல்களை நீக்கும் தன்மையும் பெற்றுள்ளதால் இவை ஒன்றாக சேர்ந்து முகத்தை பளிச்சென்று மாற்றுகின்றன.

பாதாம் பவுடர் மற்றும் பால் கலந்த கிரீம்:

நான்கு முதல் ஐந்து பாதாம் பருப்புகளை எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்.

மென்மையாக அரைத்த பிறகு இரண்டிலிருந்து மூன்று டீஸ்பூன் பால் கலந்த கிரீமை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவ வேண்டும்.

இரண்டு மணி நேரம் காய வைத்த பிறகு சூடான நீரைக் கொண்டு கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்கில் வைட்டமின் இ அதிக அளவில் உள்ளதால், முகத்திற்கு பளபளப்பையும் முகத்தில் உள்ள கருமையும் போக்கிவிடும்.

சந்தனம் மற்றும் பன்னீர்:

சந்தனத்துடன் சிறிது பன்னீர் கலந்து நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவ வேண்டும்.

ஒரு மணி நேரம் காய விட்ட பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவி விட வேண்டும்.

பன்னீர் ஆனது சருமத்தில் உள்ள PH அளவை சமன் செய்வதோடு சந்தனம் முகத்திற்கு பளிச்சென்ற தன்மையை உண்டாக்குகிறது.

தக்காளி மற்றும் கடலை மாவு:

பாதி தக்காளியை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக அரைக்க வேண்டும்.

பிறகு இரண்டிலிருந்து மூன்று டீஸ்பூன் கடலை மாவை அதனுடன் சேர்க்க வேண்டும். அக்கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து, இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வரை காய விட வேண்டும்.

அதன் பிறகு அதனை குளிர்ந்த நீரை கொண்டு கழுவி விடலாம்.

இந்த கலவையில் இயற்கை அமிலங்கள் அதிக அளவில் இருப்பதால், அவை ஒன்றாக வேலை செய்து தோளிற்கு பளபளப்பை உண்டாக்குகின்றன.

Related posts

Leave a Comment