June 10, 2023
செய்திகள்

குடிமகன்களை கவரும் வகையில் சென்னை டூ பாண்டிசேரிக்கு “பீர் பஸ் சுற்றுலா”…! தனியார் நிறுவனம் அதிரடி…!

குடிமகன்களை கவரும் வகையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் எனப்படும் பிரத்யேகமான பேருந்து வரும் இருபத்தி இரண்டாம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா பேருந்து சேவை குடிகார ஆசாமிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைய உள்ளது.

“பிரே அவுஸ் டூர்” என்ற பெயரில் “கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி” என்ற தனியார் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

“பீர் பஸ் சுற்றுலா” என்று அழைப்பதால் பஸ்சில் இருந்து குடிப்பது என்று யாரும் நினைக்க வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதிக்கவில்லை என்று இந்தப் பீர் பஸ் பயணத்தை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், பேருந்தில் வருபவர்கள் மூன்று வேளை உணவு, அன்லிமிடெட் பிரை, சைடிஷ் ஆகியவை கொடுக்கப்படுமாம். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி படுவேகமாக நடைபெற்று வருகிறது.

பாண்டிச்சேரியில் அரசு அனுமதித்த இடத்தில் மட்டும் மது அருந்த அனுமதிக்கப்படுமாம். நாற்பது பயணிகள் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுவிட்டு அதே நாள் மீண்டும் சென்னை திரும்பி வரலாம்.

வாரம் முழுவதும் பரபரப்பான வேலைகளில் இருப்பவர்கள் வார இறுதி விடுமுறை நாளை ஜாலியாக பாண்டிச்சேரிக்குச் சென்று புத்துணர்ச்சி அடையலாம்.

இந்தப் பேருந்தில் ரூ.3,000 வீதம் கட்டணம் செலுத்தி புதுச்சேரியை சுற்றிப் பார்த்துவிட்டு அன்றே சென்னை திரும்பலாம்.

Related posts

Leave a Comment