November 27, 2022
உடல்நலம்

ஆளிவிதையில் இத்தனை நன்மைகள் உள்ளதா ? உங்களுக்கு தெரியுமா ….

ஆளி விதையில் நமக்கு தெரியாத பல விதமான நன்மைகள் உள்ளன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. முடி வளரும் தன்மையை அதிகபடுத்துகிறது. ஆளிவிதையின் எண்ணெய்யை சரும பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

மேலும் பல விதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இது குறித்து நாம் பின்வரும் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஆளிவிதை கிடைக்கும் இடம்

நம்மில் பல பேருக்கும் ஆளி விதை என்றால் என்ன என்றே தெரியாது. ஆளிவிதை என்பது நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய காய்கறி வகைகளான வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போல தான் இருக்கும்.

இது எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். ஆனால் இதில் அதிக சத்துகள் உள்ளதினால் வெளிநாட்டினர் அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.

எப்படி சாப்பிட வேண்டும்

ஆளி விதையை அப்படியே சாப்பிட கூடாது. அப்படியே எடுத்துக்கொண்டால் செரிமானக் கோளாறு உண்டாகும். அதனால் இதைப் பொடியாகத்தான் உட்கொள்ள வேண்டும்.

இதில் உள்ள சத்துகள்

ஆளி விதையில் புரதம், கால்சியம், ஜின்க், மெக்னீசியம், இரும்பு , எல்லாவற்றுக்கும் மேலாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நார்ச்சத்து, போன்றவை அதிகமாக உள்ளன.

மல சிக்கலுக்கு நல்லது

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் உள்ள அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.

இதயத்தைக் பாதுகாக்கிறது

ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் பாதுகாக்கிறது. மேலும் மூளையின் சக்தியை அதிகரிக்கிறது, புற்று நோய் வராமல் தடுக்கிறது.

உடலைச் சுறுசுறுப்பாக்கும்

ஆளிவிதையில் உள்ள லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம் ஆகிய மூன்றும் உடலைச் சுறுசுறுப்பாக்கும். நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

பக்கவாதம் வராமல் தடுக்கும்

ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம். இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசி வராமல் பாதுகாக்கிறது. அது மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

துரித உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது. இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

`லிக்னன்ஸ்’ (Lignans) எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணைபுரியாவிட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை அளிக்க உதவுகிறது. அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

எடையைக் குறைக்க உதவும்

குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டது இந்த ஆளி விதை. அதனால் மிக குறைந்த அளவு கலோரியே உள்ளது.

ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். புரதச்சத்து நிறைந்த இந்த ஆளி விதை சைவ உணவு உண்பவர்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

முடி வளரும்

தலை முடி அதிகமாக இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம் தான். இருந்தாலும் எத்தனை பேருக்கு அழகான அடர்த்தியான, கருமையான, நீளமானதலை முடி இருக்கிறது. இப்போது முடி உதிர்வது இயற்க்கை ஆகி விட்டது.

இது ஹார்மோன் குறைபாடு காரணமாக தான் ஏற்படுகிறது. மேலும் ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளி விதை ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. தொடர்ந்து இதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுப்படும், முடி வளர்வதற்கு உதவும்.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும்

ஆளி விதை ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மேலும் அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

பசியைக் குறைக்கும்

ஆளி விதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பசியைக் கட்டுப்படுத்தி, நிறைவைத் தருகிறது.

Related posts

Leave a Comment