January 31, 2023
ஆன்மீகம்

கோகுலாஷ்டமி தினத்தில் வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்:

இந்தியா முழுவதும் நாளை (23.08.2019) கோகுலாஷ்டமி தினம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் தேய் பிறை அஷ்டமி நாளை கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடு கிறோம். இந்த தினத்தை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி , ஸ்ரீஜெயந்தி பல பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

கடவுள் மகனாக பிறக்க தவம் செய்திருக்க வேண்டும் என கூறுவதுண்டு. அப்படி பகவான் கிருஷ்ணர் வசுதேவர்- தேவகிக்கு மூன்றாவது முறையாக மகனாக பிறந்தார் என்றால் அவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில், நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என கொண்டாடுகின்றோம்.

இந்த ஆண்டு 5246வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடு கின்றோம். கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா” ”முகுந்தா” என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.

கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்.கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

அதனால் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மா இலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்க வேண்டும்.

கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். பின்பு பூஜை அறையில் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும்.

காலையில் பூஜை செய்வதை விட மாலையில் பூஜை செய்வது சிறப்பானது.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பகவான் கிருஷ்ணரை வேண்டி கொள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது.

கோகுலாஷ்டமி தினத்தில் பூஜை மேற்கொண்டால் இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பலுகி பெருகும்.

கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

Related posts

Leave a Comment