November 27, 2022
உடல்நலம்

10 விதமான ஆரோக்கிய நன்மைகளை தரும் சாம்பைர் !

சாம்பைர்(samphire) ஒரு உப்பு சுவை கொண்ட சதைப்பற்றுள்ள தாவரமாகும். இது சாம்பைர், கடல்-பெருஞ்சீரகம், க்ரெஸ்ட் மரைன், சாம்பியர், ட்ரூ சாம்பைர், கடல் சாம்பைர், ராக் பெருஞ்சீரகம், முகடு கடல் மற்றும் கல் உள்ளிட்ட பல பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளது. மேலும் இது கடலோர பகுதிகளில் அதிகமாக வளருவத்தினால் கடல் காய்கறி என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரிட்டன், அயர்லாந்தின் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரைகள், மத்திய தரைக்கடல், ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்கா போன்ற இடங்களில் கிடைக்கிறது.

இது சுமார் 10-30 செ.மீ உயரம் வளரும். கடல், பாறைகள், மற்றும் கரை பகுதிகளில் காணப்படுகிறது. ராக் சாம்பைர் ஒரு உண்ணக்கூடிய காட்டு தாவரமாகும். இது பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் பூக்கள், விதைகள் மற்றும் பழங்களின் நிறம் வளர்ச்சியின் போது மாறுகிறது. ராக் சாம்பையரில் தண்டுகள் , இலைகள் நீலம் மற்றும் பச்சை நிறமுடனும் பூக்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறமுடனும் இருக்கும். அப்படிப்பட்ட இந்த காய்கறியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1. செரிமானம்

ராக் சாம்பைர் காய்கறியில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் செரிமானத்தை சீர்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ஃபைபர் குடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

2. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது எலும்புகளை வலுவாக வைத்து கொள்ளும். அந்தவகையில் ராக் சாம்பைர் காய்கறியில் கால்சியம் சத்து மிகவும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த காய்கறியை சாப்பிடுவதன் மூலம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயது சென்றாலும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

3. புற்றுநோய்

உங்கள் உணவில் சாம்பையரைச் சேர்த்து சாப்பிடுவது தோல் முதல் புற்றுநோய் வரை பலவிதமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நோய்க்கிருமிகள் அல்லது பிற பாக்டீரியாக்கள் உடலை தாக்காமல் பாதுகாக்கின்றன.

4. தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது

சிலருக்கு இரவு நேரங்களில் சரியான தூக்கம் வருவது இல்லை. இதற்க்கு முக்கியமான காரணமாக இருப்பது மெக்னீசியம் சத்து குறைபாடு. இந்த பிரச்சனையை போக்க சாம்பைர் காய்கறி உதவுகிறது.

5. வீக்கத்தைக் குறைக்கிறது

கீல்வாதம், மூல நோய் மற்றும் உடலை பாதிக்கும் பல அழற்சி நிலைகள் உள்ளன. சாம்பையரின் அழற்சி எதிர்ப்பு தன்மை இது போன்ற நோய்களின் வலியைக் குறைக்கவும், வீக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

6. நோயெதிர்ப்பு சக்தி

வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் உடலுக்கு அவசியமான அவசியமான வைட்டமின்கள் மட்டுமல்லாமல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மேலும் இந்த இரண்டு வைட்டமின்களும் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின

7. எடை இழப்பு

ராக் சாம்பியரின் மிகக் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு சத்தை கொண்டிருப்பதால் பசி உணர்வை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்து உறுஞ்சுதலை அதிகரிக்கிறது.

8. இதய நோய்

ஆண்டுதோறும் இதய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொட்டாசிய சத்தின் குறைபாடு தான் இந்த நோய்க்கு காரணமாக கண்டறிந்துள்ளன. பொட்டாசியம் சத்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும் , இருதய நோய்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

9. தசை சுருக்கம்

ராக் சாம்பையரில் சோடியம் உள்ளது. இது ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது தசைகள் சுருக்கத்தை குறைக்க உதவுகிறது.

10. தொற்று நோய்

வெள்ளை இரத்த அணுக்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது. இது தொற்றுநோயை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. மேலும் ராக் சாம்பையரில் உள்ள வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

Related posts

Leave a Comment