அழகை பராமரிப்பதில் நாம் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவோம். ஆனால் பாதங்களை யாரும் கவனிப்பதே இல்லை. இதனால் பாதங்கள் மற்றும் கால்களில் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுகிறது. அதாவது அரிப்பு, வலி போன்றவை ஏற்படுகிறது. மேலும் கால்களில் வெடிப்பு பிரச்சனை கூட ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை எளிய முறையில் போக்கி பாதத்தை அழகாக மாற்றும் குறிப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
அழகு சேர்க்கும் பொருளாக மட்டுமல்லாமல் சமையல் பொருள்களில் கூட பயன்படுத்தப்படும் ஒரு பொருள் வினிகர். இது 50க்கும் மேற்பட்ட நன்மைகளை தருகிறது. மேலும் பாத பிரச்சனைகளை போக்கி பாதத்திற்கு அழகு சேர்க்கும் பொருளில் ஒன்றாக விளங்குகிறது. இனி வினிகர் பாதத்திற்கு எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்று விளக்கமாக பார்ப்போம்.
பூஞ்சை தொற்று
பூஞ்சை தொற்றினால் சிலருக்கு உள்ளங்கால்கள் மற்றும் விரல்களுக்கு இடையில் ஒருவகையான அலா்ஜி ஏற்படுகிறது. இதனை எக்ஸிமா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் நீச்சல் குளங்களில் நீந்துபவா்களின் பாதங்களில் எளிதாக ஏற்படுகிறது.மேலும் செருப்பு அணியாமல் வெறும் காலோடு நடப்பவர்களுக்கு இது ஏற்படுகிறது. இந்த பூஞ்சை அலா்ஜியானது பாதங்களில் வறட்சி, வீக்கம் மற்றும் கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இதற்க்கு வினிகர் பெரிதும் உதவுகிறது. இதில் பூஞ்சைகளுக்கு எதிரான தடுப்பாற்றல் உள்ளது. ஆகவே பாதங்களில் இப்படிப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் தொடா்ந்து வினிகரைக் கொண்டு கழுவி வந்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
குதிங்கால் வெடிப்பு
சிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அதனால் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனை படுவர். அப்படிப் பட்டவர்கள் வினிகர் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் உலர்ந்த பாதத்தை கொண்டவர்களுக்கும் இது மிகவும் நல்லது. இதில் உள்ள அமிலத் தன்மை நமது பாதங்களுக்கு நல்ல ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும் பாதங்களை வினிகரில் கழுவும் போது நமது பாதங்கள் மென்மைபடுத்துகிறது.
பாதங்களில் இருக்கும் நாற்றத்தைப் போக்கும்
நமது பாதங்களில் இருக்கும் வியர்வை மற்றும் ஷூக்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களின் இருந்து வரும் நாற்றம் சில நேரங்களில் மிக மோசமாக இருக்கும். இதற்க்கு வினிகரை பயன்படுத்தலாம். வினிகரில் உங்கள் பாதங்களை நனைத்தால் கெட்ட நாற்றம் மறைந்துவிடும். ஆகவே அடிக்கடி வினிகரில் உங்கள் பாதங்களை நனைத்து வந்தால், ஷூக்களை கழற்றும் போது ஏற்படும் நாற்றம் விலகும்.