November 27, 2022
டிப்ஸ்

இந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிந்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

இந்த நூற்றாண்டில் உள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருமே மோதிரத்தை விரும்பி அணிகின்றனர். மோதிரம் அணிய பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. மோதிரங்களில் பல வகைகள் உள்ளன.

தங்கம், வெள்ளி, செம்பு, வைரம் மற்றும் கல் பதித்த மோதிரங்கள் என பலவகையான மோதிரங்கள் கிடைக்கின்றன. இந்த பல வகைகளில் வெள்ளி மோதிரத்தை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சாஸ்திரங்கள்

வேத சாஸ்திரங்களின் படி வியாழன் மற்றும் சந்திர கிரகத்தின் அருளை பெற வெள்ளி உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுவதுடன் பல நன்மைகளையும் இது தருகிறது.

ஜோதிடம்

வெள்ளி என்பது வியாழன் மற்றும் சந்திர கிரஹத்துடன் தொடர்புடையதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இது வாழ்க்கையில் பெருமையையும், அதிர்ஷ்டத்தையும் தர கூடியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் இன்பத்தை அதிகரிப்பதோடு அழகாகவும் மாற்றும் சக்தி உடையது. உடல் ரீதியாக பார்க்கும் போது நீர் மற்றும் கபத்தின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

நேர்மறை எண்ணங்கள்:

வெள்ளியை பல வழிகளில் நம் வீடுகளில் உபயோகப்படுத்தலாம். இதை நம் வீடுகளில் உபயோகப்படுத்தும் போது நேர்மறை சக்தியை அதிகரிக்கும். உதாரணமாக சமயலறையில், படுக்கையறையில் மற்றும் விரல்களில் கூட அணிந்து கொள்ளலாம். மேலும் இது மோசமான சூழ்நிலைகளில் உங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தவும் உதவுகிறது.

எந்த விரலில் அணிவது நல்லது?

வெள்ளி மோதிரம் அணியும் போது வலது கையின் சுண்டு விரலில் அணிவது நல்லது. இதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. நாம் சுண்டு விரலில் அணிந்திருக்கும் வெள்ளி மோதிரத்தை ஒரு தண்ணீர் பெளலில் வைத்து பார்த்தால் அது ஆற்றலை கிரகிக்கும் சக்தியுடன் காணப்படுவது நாம் பார்த்தாலே தெரிந்து விடும்.

எப்போது வாங்குவது நல்லது :

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும் பன்னீரும் கலந்த நீரில் கழுவி சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்வது நல்லது.

க்லீம் மந்திரம்

தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம் போன்றவை சிறக்க க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணிவது நல்லது.

ஸ்ரீம் மந்திரம்

மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.

பயன்கள்:

கோபத்தைக் குறைத்து, வசீகர சக்தியை அதிகரிக்கும்.

வாழ்வில் செல்வ வளமும், அதிர்ஷ்டமும் பெருகும்.

அழகும், மன அமைதியும் உண்டாகும்.

கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

மூட்டு வலி,மனநிலை பாதிப்பு, மனக்குழப்பம்,தொடர் சளித் தொந்தரவு, மற்றும் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

வெள்ளி செயின்

ஒருவேளை உங்களுக்கு மோதிரம் அணிய பிடிக்கவில்லை என்றால் வெள்ளி செயின் அணிந்து கொள்ள நல்ல பலன் கிடைக்கும். இது உங்கள் தொண்டையை பராமரிக்க உதவும். அதுமட்டுமல்லாமல் பேச்சு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் குணப்படுத்தும். மேலும் தூக்கம் வராதவரக்ளுக்கு நல்ல தூக்கத்தை தரும்.

Related posts

Leave a Comment