டிப்ஸ்

பழங்களை சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?

பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு அதிக நன்மையை தரும் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இந்த பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் அதில் அடங்கியுள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கும் தெரியுமா? தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உணவில் 50% இருப்பது மிக சிறந்தது. அமேரிக்காவில் வேளாண்துறை அறிவிப்பின்படி நாம் ஒருவேளை உண்ணும் உணவில் பாதி காய் மற்றும் பழங்கள் தான் இடம்பெற வேண்டும். ஆனால் பழங்களில் இனிப்பு இருப்பதால் ஒரு சில நேரத்தில் மட்டுமே பழங்களை எடுப்பது நல்லது.

பழங்களை சாப்பிட மிக சிறந்த நேரம் காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்திய பிறகு சாப்பிடுவதே. பழங்களை சாப்பிட்ட உடனேயே உணவு சாப்பிடுவது நல்லது அல்ல.

ஏனெனில் நாம் சாப்பிட்ட பழங்கள் சரியாக ஜீரணிக்கப்படாமல் போகலாம். மேலும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் சரியாக உறிஞ்சப்படாமல் போகலாம்.  ஆகவே உணவுக்கும் பழ சிற்றுண்டிக்கும் இடையில் குறைந்தது 30 நிமிட இடைவெளியை நீங்கள் விட்டுவிட வேண்டும்.

நீரிழிவு நோய் அல்லது செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களாக இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை சாப்பிட வேண்டும். அதை தாண்டி காலை மற்றும் மதிய உணவு இடைவெளியில் பழங்களை சாப்பிடுவது நல்லது.

இப்படி நாம் செய்யும் போது சில நேரங்களில் உணவுக்கு முன் எடுத்துக்கொண்டால் நாம் அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும். மேலும் பழங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அதிக நேரம் பசிக்காமல் இருக்கும் மேலும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்

முக்கியமாக இரவு நேரத்தில் படுக்கைக்கு முன் பழங்கள் சாப்பிட கூடாது. பழங்களில் அதிக இனிப்பு இருப்பதால் உங்கள் குளுக்கோஸ் அளவை அதிகரித்து இரவில் தூக்கத்தை கெடுத்து விடும். ஆகவே படுக்கைக்கு செல்லும் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது சிறந்தது.

மற்ற உணவுகளுடன் பழங்களை சேர்க்கலாமா?

உங்களுக்கு அஜீரணம் அல்லது செரிமான பிரச்சினைகள் இல்லாத வரை நீங்கள் தயிர் அல்லது உப்புடன் பழத்தை கலக்கலாம். அதுபோல சாலட் செய்யும் போது அன்னாசி, ஆரஞ்சு, முலாம்பழம் அல்லது மாதுளை போன்ற பழங்களை சேர்க்கலாம். பெர்ரி பழம் மற்றும் உலர்ந்த திராட்சை போன்ற பழங்களை தானியங்களுடன் கலப்பதில் எந்தத் தீங்கும் இல்லை.

Related posts

Leave a Comment