November 27, 2022
டிப்ஸ்

உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த இலையை வைத்து பல் தேய்த்து பாருங்க

நமது பற்களில் ஏற்படும் கறைகள் மற்றும் வாய் திறந்தால் ஏற்படும் துர்நாற்றம் மற்றவர்கள் முன் நம்மை கூச்சமடைய செய்கிறது. நாம் சிரிக்கும் பொழுதும் பேசும் பொழுதும் முகத்தை வசீகரமடைய செய்யும் பற்களில் இருக்கும், கறைகள் முக அழகையே கெடுக்கிறது.

இப்படி பற்களில் படிந்திருக்கும் கறையை போக்க நாம் கடைகளில் விற்கப்படும் எல்லாவித டூத்பேஸ்ட் வாங்கி தேய்த்து பார்ப்பதுண்டு. ஆனால் அவைகள் நிரந்தர பலனை தருவதில்லை.

இவற்றிற்கு மாறாக நாம் வீட்டில் உபயோகப்படுத்தும் சில பொருட்களை கொண்டே பற்களை முத்துப்போல வெண்மையாக பிரகாசிக்க செய்ய முடியும். அவைகள் என்ன என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

பிரியாணி இலை

கொஞ்சம் பிரியாணி இலைகளை எடுத்து, அவற்றை நன்றாக பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த பொடியை 1/4 ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போலாக்கி, இந்த பேஸ்டை வைத்து பல் துலக்கினால், பற்கள் முத்துப்போல மின்ன ஆரம்பிக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பை சேர்த்து, பல் தேய்க்கும் போது பற்கள் இயற்கையாகவே வெண்மையாக மாறிவிடும். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த எலுமிச்சை சாறை பயன்படுத்துங்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு உப்பை சேர்த்து பல் தேக்கும் பொழுது பற்கள் நன்றாக ஜொலிக்க ஆரம்பிக்கும். பேக்கிங் சோடா பற்களை ஜொலிக்க வைக்க கூடியது.

நீங்களும் இவற்றை பயன்படுத்தினால், அழகான ஜொலிக்கக் கூடிய முத்து போன்ற பற்களை பெறலாம். நீங்கள் சிரிக்கும் பொழுதும், பேசும் பொழுதும் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.

Related posts

Leave a Comment