August 18, 2022
தகவல்

சுவையான டீயும் கொஞ்சம் தகவலும்

ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட புத்துணர்ச்சியைக் கொடுக்கும் டீ எப்படி போடலாம் என்பதோடு ஒரு சில தகவல்களையும் பற்றி பார்ப்போம். பொதுவாக டீ போடுவது என்பது மிகப்பெரிய கடினமான வேலை ஒன்றும் இல்லை. யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் ஒரு சிலர் போடும் டீ அதீத சுவையோடு மீண்டும் மீண்டும் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும்.

ஒரு சில கடைகளில் போட்டுக் கொடுக்கும் டீ நம்முடைய நாவின் சுவை நரம்புகளை சுண்டி இழுத்து மீண்டும் மீண்டும் அந்த கடையின் அருகில் எப்பொழுது சென்றாலும் ஒரு டீ குடித்து விட்டு செல்லலாம் என நம்முடைய மனதை அந்த கடையை நோக்கி இழுத்து செல்லும். ஆனால் ஒரு சில கடையில் டீ குடிக்க சென்றால் அந்த டீயை நாவில் வைத்தவுடன் எதற்காக இந்த கடைக்கு நாம் டீ குடிக்க வந்தோம் என்ற எண்ணத்தை கொடுத்துவிடும்.

அந்த அளவிற்கு சுடுதண்ணீரில் ஏதோ கலந்து கொடுத்து இருப்பார்கள். நிச்சயமாக இந்த அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். இப்படிப்பட்ட கடைகளில் மறுமுறை யாராவது டீ குடிக்கலாம் என உங்களை அழைத்தால் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவீர்கள். ஏனென்றால் அந்த கடையில் உள்ள டீ அப்படி ஒரு சுவையாக இருக்கும். சில நட்புகளை தவிர்க்க முடியாமல் வேண்டா வெறுப்பாக மறுமுறை சென்று குடிப்பவர்களுக்கு எப்பொழுது டீயை குடித்து முடித்து விட்டு வெளியே வந்து விட்டால் நன்றாக இருக்கும் என தோன்றும்.

உடல் மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஒரு டீ போட்டு குடித்தால் நம்முடைய உடலில் உள்ள சோர்வுகள் நீங்கி உடலும் மனமும் தெம்பாகி நம்முடைய வேலைகளை சந்தோஷமாக செய்யத் தொடங்குவோம். டீ நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. அதிலும் சுவையாக ஒரு டீ போட்டு குடிக்கும் பொழுது அந்த ஒரு தருணமே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

டீயின் சுவை நம்முடைய நாவின் சுவை நரம்புகளை சுண்டி இழுத்து ஒரு சில நிமிடங்கள் நம்முடைய கவலைகளை எல்லாம் மறக்க செய்து அற்புதமான ஒரு ஆற்றலையும், சக்தியையும் கொடுக்கிறது. அற்புதமான ஒரு டீ நீங்களும் உங்கள் வீட்டில் போட்டு பாருங்கள். உலகையே ஒரு ஐந்து நிமிடங்கள் மறக்க செய்யும் அந்த டீயின் சுவை. உலகம் முழுவதும் பாலில் தேயிலை கலந்து டீ குடிப்பது பிரபலம்.

உலகம் முழுவதும் ஏராளமான வகையில் டீயை தயாரிக்கிறார்கள். பாலில், தேயிலை, வெள்ளை சர்க்கரை மட்டும் கலந்து தயாரித்து டீ குடிப்பது பொதுவாக நம்முடைய ஊரில் வழக்கம். கூடவே ஏலக்காய் போட்டு டீ குடிப்பவர்கள் உண்டு, இஞ்சி போட்டு டீ குடிப்பவர்கள் உண்டு, மசாலா டீ குடிப்பவர்கள் உண்டு. காலையில் 4 மணிக்கே எழுந்து பசும்பால் கலந்த டீ குடிப்பவர்கள் பலருண்டு.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பலருக்கும் டீ வேண்டும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டீ குடித்தால் சோம்பல் நீங்கி உற்சாகமாக வேலை செய்வார்கள். மதிய சாப்பாட்டை முடித்து ஒரு நான்கு மணி அளவில் நல்ல சுவையான ஒரு டீ குடித்தால் அற்புதமாக இருக்கும். இரவில் தூங்கப் போவதற்கு முன்னால் டீ குடித்து படுப்பவர்களும் உண்டு.

இப்படி டீ நம்மோடு ஒன்றியது. நீங்கள் பார்த்ததும் அற்புதமான ஒரு டீ வகை. பாலுடன் ஒரு ஏலக்காய், சிறிது தேயிலை தூள், சிறிது வெள்ளை சர்க்கரை சேர்த்து கலந்து எடுத்த அற்புதமான ஒரு டீ. இந்த டீயை போட்டு உற்சாகமாக குடித்துக்கொண்டே உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் இன்னொரு டீ கலவையோடு உங்களை பார்க்கலாம் நன்றி.

Related posts

Leave a Comment