November 27, 2022
உடல்நலம்

வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு பாருங்க

வெள்ளரிக்காயில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் வெள்ளரிக்காயில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்துக்கள், வைட்டமின், வைட்டமின் கே, மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

வெள்ளரிக்காய்களில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளன. பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் மாலிப்டினம் இதில் உள்ளது. வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து காணப்படுவதால் இது நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் நம்முடைய உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உங்களுடைய உடலை வெப்பத்தில் இருந்து காக்கும். வெள்ளரிக்காய் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது. இதனால் இதய நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் குறைகிறது. உயர் ரத்த அழுத்தம் அதிகம் இருக்கக்கூடிய வயதானவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. வெள்ளரிக்காய் செரிமான பிரச்சனைகளை சீராக்குகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிடும் பொழுது அது வயிற்றுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் வெள்ளரிக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இது நம்முடைய செரிமானத்தை மெதுவாக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. மேலும் குடல் இயக்கங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது வெள்ளரிக்காய். இதனால் நீரிழிவு நோயை தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது. வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. மேலும் கலோரிகள் குறைவாக உள்ளது. 100 கிராம் வெள்ளரிக்காயில் 15.5 கலோரிகள் மட்டுமே உள்ளது.

வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய அதிக தண்ணீர் மற்றும் குறைந்த கலோரி காரணமாக இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காய் நம்முடைய தோலை அழகாக்குகிறது. வெள்ளரிக்காய் சாற்றை சருமத்தில் தடவும் போது சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற தொடங்குகிறது.

வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் இயற்கையாகவே நம்முடைய சருமத்தை பளபளக்க செய்து அழகாக்குகிறது. வெள்ளரிக்காய் சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களையும் குறைக்கிறது. வெள்ளரிக்காய் நம்முடைய கண்களை ஆரோக்கியப்படுத்துகிறது.

வெள்ளரிக்காய் துண்டுகளை சிறிதாக வெட்டி கண்களின் மேல் சுமார் பத்து நிமிடங்கள் வைத்து இருக்கும் பொழுது இது கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை குறைத்து கண்களை குளிர்ச்சியடைய செய்கிறது. புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் இருக்கக் கூடிய நார்ச்சத்து பெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய குக்குர்பிடாசின் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் நம்முடைய முடி மற்றும் நகங்களை ஆரோக்கிய படுத்துகிறது. வெள்ளரிக்காயில் சிலிக்கா உள்ளது. இது நம்முடைய முடி மற்றும் நகங்களை பராமரிக்க உதவுகிறது. இது நம்முடைய நகங்களை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் செய்கிறது.

மேலும் முடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. முடி வேகமாக உடைந்து போவதை இது தடுக்கிறது. வெள்ளரிக்காய் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்களை விரைவில் அழிக்கிறது. இதனால் வாய் துர்நாற்றம் நீங்கி வாய் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment