January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

பேரிச்சம்பழம் பற்றி உங்களில் பலரும் அறிந்திராத உண்மைகள்

பேரிச்சம்பழம் எனப்படும் டேட்ஸ் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான டாக்டிலோஸ் என்பதிலிருந்து வந்தது. அப்படி என்றால் விரல் என பொருள். ஏனென்றால் பேரிச்சம்பழம் ஒரு விரலின் நுனி போல இருக்கிறது.

ஒரு கப் பேரிச்சம் பழத்தில் சுமார் 380 கலோரிகள் இருக்கிறது. இதில் நம்முடைய உடலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி தேவையான பொட்டாசியத்தில் 27 சதவிகிதமும் தினசரி தேவையான நார்ச்சத்து 48 சதவிகிதம் இருக்கிறது. கூடவே கால்சியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது.

ஒருவர் பேரிச்சம் பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியுமாம். ஒரு நாளைக்கு 15 பேரிச்சம் பழங்களை மட்டுமே சாப்பிட்டு ஒருவர் உயிர் வாழ முடியுமாம். இது உங்களுடைய உடலுக்குத் தேவையான எல்லா தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை கொடுக்கிறது.

நாம் பயன்படுத்தக்கூடிய சோப்பு மற்றும் ஐலைனர்கள் தயாரிப்பதற்கு பேரிச்சம் பழத்தின் விதைகள் பயன்படுத்தப்படுகிறது.

பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கூட ஒரு சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுமாம். உங்களில் யாருக்காவது இந்த பிரச்சனை இருக்கிறதா.

பேரிச்சம் பழத்தில் குறைந்த அளவு நீர்ச்சத்து மற்றும் அதிக அளவு சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக சரியான முறையில் இதை சேமித்து வைத்திருந்தால் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

பேரிச்சம் பழத்தின் விதைகள் பல ஆண்டுகளாக மண்ணில் இருந்தாலும் கெட்டுப் போகாது. முளைப்பதற்கு தேவையான சூரிய ஒளி மற்றும் தண்ணீர் கிடைத்தால் உடனடியாக முளைத்து வெளியே வந்துவிடும். இப்படி ஏறத்தாழ 50 ஆண்டுகள் வரைக்கும் விதை உயிர்ப்புடன் இருக்குமாம்.

ஆதிகாலத்திலிருந்தே பேரிச்சம்பழத்தை மனிதர்கள் பயிரிட்டுள்ளார்கள். ஈராக்கில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே பேரிச்சம்பழம் பயிரிடப்பட்டிருக்கிறதாம். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 5 ஆயிரம் ஆண்டுகளாக பேரீச்சம்பழம் பயிரிடப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழத்தில் பலவிதமான வகைகள் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 199 மேற்பட்ட வெவ்வேறு வகை பேரீச்சம் பழங்கள் உள்ளது. இங்கு சுமார் 44 மில்லியன் பேரிச்சை மரங்கள் உள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு 900 டன் பேரிச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எகிப்து. பண்டைய எகிப்தியர்கள் பேரீச்சம்பழங்களிலிருந்து ஒயின் தயாரித்து குடித்து வந்துள்ளார்கள்.

பூமியில் சுமார் 3 சதவிகிதம் நிலங்கள் பேரிச்சம் பழங்கள் பயிரிட உபயோகப்படுத்தப்படுகிறது. இதிலிருந்து ஆண்டுக்கு 4 மில்லியன் டன் பேரீச்சம் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓமானில் ஒரு ஆண்குழந்தை பிறந்தால் குழந்தை பிறந்தவுடன் ஒரு பேரீச்சை மரத்தை நடுகிறார்கள். குழந்தை வளரும் பொழுது பேரீச்சை மரம் வளர்ந்து கனிகளை கொடுத்து அந்தக் குடும்பத்தை பசியில்லாமல் காக்கும் என சொல்கிறார்கள்.

மத்திய கிழக்கின் பெடோயின் பழங்குடியின மக்கள் தங்களுடைய உணவில் அதிகளவு பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களிடம் புற்றுநோயின் தாக்கம் மிகமிகக் குறைவாக உள்ளதாம்.

பண்டைய ரோமில் வெற்றியின் அடையாளமாக பேரீச்சை மர பனை ஓலைகள் ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழங்கள் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பேரீச்ச மரங்கள் பொதுவாக 69 இருந்து 75 அடி உயரம் வரைக்கும் வளரக்கூடியது. இதனுடைய இலைகள் 13 லிருந்து 20 அடி நீளம் இருக்கும்.

Related posts

Leave a Comment