November 27, 2022
செல்வம்

வைரமானது நல்லதா,கெட்டதா என்று நாமே எளிதில் கண்டறிய சில வழிகள்

வைரமானது நல்லதா,கெட்டதா என்று எளிய முறையில் கண்டறியலாம்.ஒரு வைரமானது நல்லதாக இருந்தால் அதன் மீது நம் மூச்சுக் காற்று பட்டவுடன் அந்த வைரமானது பொலிவிழந்து அதன் உண்மையான பிரகாசம் மங்கும். திரும்பவும் சிறிது நேரத்தில் அதன் பழைய பிரகாசம் வந்தால் அது நல்ல வைரம் ஆகும்.அதிக நேரம் கழித்து பிரகாசம் தந்தாள் அது நல்ல வைரம் அல்ல வெறும் போலி வைரம் என்பதை உறுதி செய்யலாம்.

அதுமட்டுமல்லாது  வைரத்தின் மீது ஓர் அரத்தினை வைத்து ஒரு கோடு இழுத்தால் அந்த கோடானது கண்ணுக்கு தெரிந்தால் அது போலி வைரம். நல்ல வைரத்தில் அந்த கோடானது கண்ணுக்கு தெரிவதில்லை.

 

ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு புள்ளி வையுங்கள். அந்த புள்ளியின் மேல் வைரத்தை வைத்து அந்த வைரத்தின் மேல் பாருங்கள்.அப்படி பார்க்கும் போது அந்த ஒரு புள்ளி மட்டும் தெரிந்தால் அது நல்ல வைரம். ஒன்றுக்கு மேல் பல புள்ளிகள் தெரிந்தால் அது போலி வைரம்.

உண்மையான வைரத்தினை நீரில் போட்டால் அப்படியே தெரியும். போலி வைரம் மங்கலாக தான் தெரியும்.

நல்ல வைரத்தை கையில் எடுத்து பார்க்கும் பொது அதில் வானவில்லின் வண்ணங்கள் உங்களுக்கு காண முடிந்தால் அது நல்ல வைரம்.

Related posts

Leave a Comment