January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

கழிப்பறைகளுக்கான டாய்லெட் மியூசியம் பற்றி தெரியுமா உங்களுக்கு

பலவகையான மியூசியங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டாய்லெட் மியூசியம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம்மில் பலரும் இது பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டோம். அதிலும் இந்த டாய்லெட் மியூசியம் நம்முடைய நாட்டில்தான் உள்ளது தெரியுமா உங்களுக்கு? ஆம் இந்த மியூசியம் தலைநகர் டெல்லியில் உள்ளது. இந்த சுலப் இன்டர்நேஷனல் மியூசியம் ஆஃப் டாய்லெட்ஸ் தாய் நிறுவனமான சுலப் இன்டர்நேஷனல் சோஷியல் சர்வீஸ் ஆர்கனைசேஷன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு டாக்டர் பிந்தேஷ்வர் பதக் என்பவரால் நிறுவப்பட்டது இந்த கழிப்பறை மியூசியம். இவர் உலகப் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் மற்றும் சமூகவியலாளர்.1992 இல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 50 நாடுகளில் உள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கிமு 2500ம் ஆண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலகம் முழுவதும் பரவியிருந்த சுகாதார கலைப்பொருட்கள் பண்டைய காலம், இடைக்காலம் மற்றும் நவீனகாலம் என வரிசைப்படி அமைக்கப்பட்டன.

கி.பி 1145 முதல் தற்போது வரை நடைமுறையில் உள்ள பிரைவ்ஸ், சேம்பர் பானைகள், அலங்கரிக்கப்பட்ட விக்டோரியன் டாய்லெட் இருக்கைகள், கழிப்பறை மரச்சாமான்கள், பிடெட்டுகள் மற்றும் தண்ணீர் கழிப்பறைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிமு 2500 முதல் இன்றுவரை கழிப்பறைகளின் வரலாற்று பரிணாம வளர்ச்சியை விவரிக்கும் தகவல்கள், படங்கள் மற்றும் பொருள்களின் அரிய சேகரிப்பு இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள் சமுதாயங்கள் தண்ணீர் கழிப்பறைகள் இல்லாத பொழுது உலகம் எப்படி இருந்தது என்பதையும் தண்ணீர் கழிப்பறைகள் கண்டுபிடிப்பால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களையும் எடுத்துச்சொல்கிறது. ரோமானிய பேரரசர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கழிப்பறை பானைகளை எப்படி வைத்திருந்தார்கள் என்பதையும் இந்த அருங்காட்சியகம் காட்டுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் 1596 ஆம் ஆண்டு ராணி முதலாம் எலிசபெத் ஆட்சியின் போது அரசவை அதிகாரியாக இருந்த சர் ஜான் ஹாரிங்டன் வடிவமைத்த ஃப்ளஷ் பாட் பற்றிய ஒரு அரிய பதிவு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கிமு 2,500 க்கு முந்தைய ஹரப்பா நாகரிகத்தின் கழிவுநீர் அமைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இந்த டாய்லெட் மியூசியத்தை பார்த்து செல்கின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரைக்கும் நீங்கள் காலை 10 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணிவரைக்கும் இந்த டாய்லெட் மியூசியத்தை பார்வையிடலாம்.

Related posts

Leave a Comment