November 27, 2022
தகவல்

நீங்கள் அன்றாடம் வாங்கும் இந்த பொருட்கள் உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஏராளமான பொருட்கள் இந்தியாவில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் கண்மூடித்தனமாக விற்கப்படுகின்றன. எப்படி உலகம் முழுவதும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்தப் பொருள்கள் இந்தியாவில் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது என்பது பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது. வெளிநாடுகளில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட ஆனால் இந்தியாவில் விற்பனை ஆகக்கூடிய இந்த பொருட்களெல்லாம் உங்களுக்கு தெரிந்த உங்களில் பலரும் அடிக்கடி உபயோகப்படுத்தும் பொருட்கள் அவைகளைப் பற்றி பார்ப்போம்.

1. லைஃப் பாய் சோப்

லைஃப் பாய் சோப் உங்களில் பலரும் உபயோகப்படுத்தி இருப்பீர்கள். உபயோகப்படுத்திக் கொண்டிருப்பீர்கள். இந்த சோப்பு அமெரிக்காவில் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சோப்பாக அங்கு கருதப்படுகிறது. அங்குள்ள மக்களில் ஒரு சிலர் குறிப்பிட்ட விலங்குகளை குளிப்பாட்டுவதற்கு இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்த சோப்பு மிகவும் பிரபலமானது.

2. ரெட் புல் (Red Bull)

பிரான்ஸ் மற்றும் டென்மார்க்கில் இந்த எனர்ஜி பானம் தடை செய்யப்பட்டுள்ளது. லிதுவேனியா நாட்டில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்த ரெட் புல் எனர்ஜி பானம் குடிக்க தடை உள்ளது. இந்த பானம் மாரடைப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், வலிப்பு போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக இந்த நாடுகள் நம்புகிறது. ஆனால் இந்தியாவில் இந்த பானம் எளிதாக உங்களுக்கு வாங்க கிடைக்கும். எந்தவித தடையும் இல்லை.

3. டிஸ்பிரின் (Disprin)

தலைவலி இருக்கும் பொழுது தலைவலியை குறைப்பதற்காக நாம் இந்த டிஸ்பிரின் மாத்திரையை உபயோகப்படுத்துகிறோம். இது பொதுவாக எல்லா மருந்துக் கடைகளிலும் வாங்க கிடைக்கும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல். ஆனால் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யத் தவறியதற்காக அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாத்திரை விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

4. பூச்சிக்கொல்லிகள் (Pesticides)

அறுபதுக்கு மேற்பட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லிகளான டி.டி.டி, என்டோசல்பான் மற்றும் பல பூச்சிக்கொல்லிகள் வெளி நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகள் தாவரங்கள் வழியாக நம்முடைய உடலில் நுழைந்து கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த காரணத்திற்காக இவை வெளிநாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் இது வெளிப்படையாக விற்கப்படுகின்றன. பலரும் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள். அப்படியானால் இதனால் என்னென்ன பிரச்சனைகள் நமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

5. பதப்படுத்தப்படாத பால் (Unpasteurized milk)

அமெரிக்காவிலும், கனடாவிலும் பதப்படுத்தப்படாத பால் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இதில் ஆபத்தான நுண்ணியிரிகள் மற்றும் கிருமிகள் அதிகம் இருப்பதால் இது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பொதுவாக பதப்படுத்தப்படாத பால் தான் உபயோகிக்கப்படுகிறது.

6. ஜெல்லி மிட்டாய்கள் (Jelly Sweets)

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஜெல்லி மிட்டாய் களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் போன்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக ஏராளமான வழக்குகள் அங்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு எளிதில் இவற்றை வாங்கி சாப்பிடலாம். எல்லா இடத்திலும் கிடைக்கும்.

7. நிமுலிட் (Nimulid)

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா தவிர ஏராளமான நாடுகளில் இந்த வலி நிவாரணி அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் இது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் எளிதில் வாங்க கிடைக்கிறது.

8. டி கோல்ட் டோட்டல் (D-Cold Total )

சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூறி பல நாடுகளில் இந்த டி கோல்டு டோட்டல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தொலைக்காட்சிகளில் நேரடியாக விளம்பரப்படுத்தி இந்த மாத்திரையை விற்பனை செய்கிறார்கள்.

9. ஆல்டோ 800 (Alto 800)

இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு தங்களுடைய கார் கனவை நிறைவேற்றும் விதமாக உள்ளது ஆல்டோ 800. ஆனால் குளோபல் என்சிஏ பி கிராஷ் டெஸ்ட் சோதனையில் தேர்ச்சி பெற தவறியதால் அதுவும் பல நாடுகளில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

10. கிண்டர் ஜாய்

அமெரிக்காவில் கிண்டர் ஜாய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என நிரூபணமானதால் அங்கு கிண்டர் ஜாய் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் கிண்டர் ஜாய் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது மட்டுமல்லாமல் எல்லா வீடுகளிலும் குழந்தைகள் கேட்டவுடன் கிண்டர் ஜாய் வாங்கிக் கொடுக்கிறார்கள். அமெரிக்காவில் கிண்டர் ஜாயை நீங்கள் உங்களுடன் எடுத்துச் சென்றால் சட்டவிரோதமாக கொண்டு சென்றதற்காக 2500 டாலர் வரை உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். சுமார் 185000 ரூபாய் வரை நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

Related posts

Leave a Comment