November 27, 2022
உடல்நலம்

மஞ்சளை இப்படியெல்லாம் பயன்படுத்துவது ஆபத்தானது தெரியுமா ?

இந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் பொருள்களில் ஒன்று மஞ்சள். இது சமையல் பொருளாக மட்டுமல்லாமல் சளி, இருமல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சளி மற்றும் இருமல் பிரச்சனைக்கு சூடான பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து குடிப்பது மிகவும் சிறந்து. அதுமட்டுமல்லாமல் காயங்களை ஆற வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

உடல் மற்றும் மூளைக்கு பல நன்மைகளை தரக் கூடிய மஞ்சளானது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற முக்கிய வேதிப்பொருள் இருக்கிறது. இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும்.

முழங்கால் வலிக்கான சிகிச்சை, கொழுப்பை கட்டுப்படுத்துவது, இதய நோய் மற்றும் குடல் எரிச்சல் அறிகுறியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. பலவிதமான நன்மைகள் மஞ்சளில் இருந்தாலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்த கூடியது. சரி அப்படி என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் தாங்கள் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருக்க கூடாது. மஞ்சளில் உள்ள குர்குமின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் உணவில் மஞ்சளை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

சிறுநீரகங்களில் தாதுக்கள் மற்றும் உப்பு படிவதால் உருவாகும் படிகங்களே சிறுநீரக கற்கள். இதற்க்கு கால்சியம் ஆக்சலேட் மிகவும் பொதுவான தாது. இது மஞ்சளில் அதிகமாகவே உள்ளது. ஆகவே கால்சியத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மஞ்சள் அதிகம் பயன்படுத்துவதில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பலவிதமான மருத்துவ குணம் நிறைந்தது மஞ்சள் என்றாலும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது பாதுகாப்பானது என்று கருதப்பட்டாலும் பெண்கள் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது இது தீமையை ஏற்படுத்தும். ஏனெனில் இது மாதவிடாயை தூண்டும் அல்லது கருப்பையை தூண்டி வயிற்றுக்குள் இருக்கும் கருவிற்கு தீமையை ஏற்படுத்தி விட கூடும்.

மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இது ரத்தத்தை உறைவிக்கும் திறனை கொண்டது. ஆகவே ரத்தம் தொடர்பான மருந்து எடுத்து கொள்பவர்கள் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வழியும் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் வேறுவிதமான ரத்தம் சம்பந்தமான கோளாறுகளை கொண்டவர்கள் மஞ்சள் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

Related posts

Leave a Comment