November 27, 2022
உடல்நலம்

இப்படியும் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் தெரியுமா ?

உடல் எடை பிரச்னை என்பது பலரையும் வாட்டி எடுக்கும் ஒரு முக்கியமான பிரச்னையாகவே உள்ளது.இப்படி அதிகமாக இருக்கும் எடையை குறைக்க பல முயற்சிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதனை எளிமையான முறையில் சமையலறையில் இருக்கும் பொருள்களை கொண்டே கட்டுப்படுத்தலாம் தெரியுமா ? இதற்கு தேவையான பொருள்கள் என்னவென்றும் இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

சீரகம் – 1/4 கப்
சோம்பு – 1/4 கப்
வெந்தயம் – 2 டீ ஸ்பூன்
தண்ணீர் – 150 மில்லி

சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. மேலும் பல உடல் உபாதைகளை நீக்குகிறது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்குகிறது. சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. சோம்பு செரிமான சக்தியை அதிகரித்து வயிற்று வலியை கட்டுப்படுத்த உதவுகிறது.

செய்முறை :

ஒரு வாணலியில் சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் ஆகிய மூன்றையும் நன்றாக வறுத்துக் கொள்ளவும். இவை நன்கு ஆறிய பின்பு மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளுங்கள் . இதனை காற்று புகாத படி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் சூடான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்பு வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக குடிக்கவும். இதனை அனைவரும் குடிக்கலாம். இதனால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, உடல் சூடு, அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.

Related posts

Leave a Comment