கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள், சுற்றுலா செல்வது மற்றும் திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்காக, மாதவிடாயை சில நாட்கள் முந்தியோ அல்லது தாமதமாகவோ எப்படி வரவைக்கலாம் என்று பெண்கள் பலரும் நினைப்பதுண்டு. இதை இயற்கை உணவு முறை மூலமாக சாத்தியமாக்கலாம். அது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.
மாதவிடாய் விரைவில் வரவைக்க
பொதுவாக பெண்களின் உடலில் அதிக அளவு உஷ்ணம் இருக்கும் பட்சத்தில் மாதவிடாய் விரைவாக ஏற்படும். இதற்காக உஷ்ணத்தை தூண்டக்கூடிய உணவுகள் உட்கொள்ள வேண்டும். அவையாவன,
அன்னாசி பழம்:
அன்னாசி பழம் உடலில் அதிக அளவு உஷ்ணத்தை தூண்டக்கூடிய ஒரு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இதை முன்கூட்டியே அதாவது மாதவிடாயின் 15 நாட்களுக்கு முன்னதாக சாப்பிட்டு வந்தால், விரைவில் மாதவிடாயை வர வைக்கலாம்.
பப்பாளி பழம்:
பப்பாளி பழமும் உடலில் அதிக வெப்பம் உருவாக்கி மாதவிடாயை விரைவில் வரவைக்க மிகவும் பயனுள்ள ஓர் எளிய உணவுகளில் ஓன்று. பப்பாளி பழத்தில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இதனால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது மலிவான விலைகளில் கிடைக்க கூடியதுமாகும்.
ஓம விதை:
ஓம விதைகளை தண்ணீரில் ஊற வைத்து, மாதவிடாய் வர வாய்ப்புள்ள 10 நாட்களுக்கு முன்னால், தொடர்ந்து 5 நாட்கள் ஒரு டம்ப்ளர் வீதம் குடித்து வந்தால், மாதவிடாய் சில நாட்களுக்கு முன்னால் ஏற்படும்.
எள் விதை:
எள் விதைகளுடன் வெல்லத்தைக் கலந்து, மாதவிடாயின் 15 நாட்களுக்கு முன்னதாக சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் விரைவில் ஏற்படும்.
மாதவிடாய் தாமதமாக வரவழைக்க
பொதுவாக உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சி அடையும் பட்சத்தில் மாதவிடாய் தள்ளிப்போகும். ஆகவே குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். அந்த உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பொட்டுக்கடலை:
பொட்டுக் கடலையை காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் நன்கு மென்று தின்று, பின் தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிப்போடலாம்.
வெள்ளரி:
மாதவிடாய் வர வாய்ப்புள்ள 5 நாட்களுக்கு முன்னதாகவே வெள்ளரிப் பிஞ்சுகளை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைந்து மாதவிடாய் தள்ளிப் போகும்.
வெந்தயம்:
மாதவிடாய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் 5 நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறுதளவு வெந்தயத்தை சாப்பிட்டு, தண்ணீர் குடித்து வந்தால் மாதவிலக்கு தள்ளிப் போகும்.
இதை பெண்கள் பயன்படுத்தி வந்தால், மன உளைச்சல் ஏதுமின்றி எல்லா நிகழ்வுகளிலும் பங்கு பெறலாம்.