September 28, 2022
கனவுகள்

உங்கள் கனவில் சண்டை போடுவது போல் வந்தால் என்ன பலன் தெரியுமா ?

பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு.

பிறரை அடிப்பது போல் கனவில் வந்தால்:

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். நாம் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.

சண்டை கனவு பலன்கள்:

அடிதடி, தகராறு, சண்டை சச்சரவுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியானதாக உங்களை சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.

ஆபத்து கனவில் வந்தால் என்ன பலன்:

உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும். மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவுகள் உண்டாகும்.

எலும்பு – கனவு பலன்கள்:

கனவில் எலும்பைக் காண்பது விசேஷம் என கூறப்படுகிறது. எலும்பில் சதைத்திரள் சற்று ஒட்டியதாக உள்ள எலும்பைக் கண்டால் விரைவில் அவர் செல்வந்தர் ஆவார் என்று பொருள். ஒரு மனிதனின் எலும்பைக் கண்டால், மூதாதையர் வைத்துச் சென்ற சொத்து அவரை வந்தடையும் என்று பொருள்.

ஓட்டம் – கனவு பலன்கள்:

நீங்கள் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும். உங்களின் தொழில், வியாபாரங்கள் அபிவிருத்தியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஏற்படும்.

Related posts

Leave a Comment