January 31, 2023
உடல்நலம்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய்யை சாப்பிடும்பொழுது கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா

நெய் பல ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருவது நம்மில் பலருக்கும் தெரியும். ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள நெய்யை நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

ஆயுர்வேதத்தில் நெய் முக்கியமான ஒரு பொருளாக உள்ளது. ஆயுர் வேதத்தில் சொல்லியிருக்கிற படி காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது ஒரு நாளை நீங்கள் மிக சக்தியோடு ஆரம்பிக்க உதவுகிறது.

இது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய முக்கிய ஆதாரமாக உள்ளது. நெய் மிகவும் ஆரோக்கியமான கொழுப்பாக கருதப்படுகிறது. பெரும்பாலான சமைத்த உணவுகளில் நெய் மேலோட்டமாக விடப்பட்டு அப்படியே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

நம்முடைய இரைப்பை குழாயின் அமில ph அளவை நெய் குறைக்கிறது. அதிலும் பசுநெய் இயற்கையான ஆக்சிஜனேற்றி ஆகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி ஆக்ஸிஜனேற்ற செயல்முறையை தடுக்கிறது.

ஆயுர் வேதத்தில் சொல்லியிருக்கிற படி காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிக வேகமாக அதிகரிக்கிறது. உடலில் ஏற்படக்கூடிய அதிக அளவிலான உடல் எடையை குறைக்க உதவுகிறது.

நெய்யில் இருக்கக்கூடிய பியூட்ரிக் அமிலம் உடலில் அடர்த்தியாக இருக்கும் உடல் கொழுப்புகளை திரட்டி, அதை உடலில் இருந்து வெளியேற்றும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் நெய்யை எடுத்துக்கொள்ளும்போது பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது.

நெய்யை சிறிது மஞ்சளுடன் சேர்த்து லேசாக சூடாக்கி காலையில் சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிக அளவில் மேம்படும். அதுமட்டுமில்லாமல் இது அடிக்கடி பலருக்கும் வரக்கூடிய வறட்டு இருமலை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

ஆயுர்வேதத்தில் நெய்யானது அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும் கொடுப்பதற்கு உதவுகிறது. மேலும் மூளையில் நினைவு நினைவுத்திறனை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

இதனால் ஞாபகசக்தி அதிகரிக்கும். மிக வேகமாக வயதாவதை தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்கிறது. இது இயற்கையாகவே மூட்டுகளில் ஏற்படக் கூடிய வலியை குறைக்கிறது.

எலும்பு மூட்டுகளில் மசகு எண்ணை உருவாவதை ஊக்குவிக்கிறது. இதனால் மூட்டு வலி ஏற்படும் பிரச்சனை அதிக அளவில் குறைகிறது. இது இயற்கையான மாய்ஸ்ட்ரைஸராக செயல்படுவதால் உள்ளே இருந்து சருமத்தை ஒளிரச் செய்கிறது.

இதனால் உங்களுடைய சருமம் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கும். நெய்யில் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் ஏராளமாக நிரம்பியுள்ளது. இது உங்கள் தொப்பையின் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இருப்பது உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. குறைவான தூக்கம், அதிக மன அழுத்தம், அதிக நேரம் வேலை செய்வது போன்றவை உங்கள் கண்களை சுற்றி கருமையான வட்டங்களை ஏற்படுத்தும்.

இதைக் குறைப்பதற்கு இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக கண்களின் கீழ் இருக்கும் கரு வளையத்தில் நெய்யை பயன்படுத்தும் பொழுது மிக வேகமாக இந்த கருவளையம் மறையும். இப்படி காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் நெய்யையே பயன்படுத்தி வரும் பொழுது இது ஏராளமான நன்மைகளை உங்களுக்கு தருகிறது.

Related posts

Leave a Comment