November 27, 2022
செய்திகள்

50 பேட்டரிகளை விழுங்கிய பெண் என்ன காரணம் தெரியுமா?

மனித உடலில் ஏராளமான வித்தியாசமான நோய்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. அதில் ஒன்று தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு வித்தியாசமான மனநோய். இந்த நோய் உள்ளவர்களில் ஒரு சிலர் கையில் கிடைக்கும் ஏதாவது பொருளை அப்படியே முழுங்கி விடுவார்கள். இந்த மனநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எலக்ட்ரானிக் சாதனங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய 50 பேட்டரிகளை சாப்பிட்டு அவதிப்பட்டுள்ளார்.

அவருடைய குடல் மற்றும் வயிற்றில் இருந்து 50 பேட்டரிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அறுபத்தி ஆறு வயதான பெண் ஒருவர் அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் பேட்டரிகளை உட் கொண்டதற்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பொழுது அவருடைய அடிவயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர்.

இந்த பேட்டரிகள் அவருடைய இரைப்பை குடல் பாதையில் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது. அவருக்கு மருந்துகள் கொடுத்து ஆசனவாய் வழியாக இந்த பேட்டரிகளை வெளியேற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதில் மூன்று வாரங்களில் 5 பேட்டரிகள் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பேட்டரிகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்தனர்.

அறுவை சிகிச்சை செய்து வயிற்றுப் பகுதியில் இருந்த 46 பேட்டரிகளை அகற்றினர். மேலும் நான்கு பேட்டரிகள் பெருங்குடலில் சிக்கியிருந்தது. இதை ஆசனவாய் வழியாக அகற்றினர். அப்படி மொத்தமாக அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் அனைத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களில் நாம் பயன்படுத்தக்கூடிய AA மற்றும் AAA வகை பேட்டரிகள்.

ஒரே நேரத்தில் இப்படி அதிக அளவு பேட்டரிகள் உட்கொள்ளப்பட்டு அது வெளியே எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இது ஒரு சில பெரியவர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில குழந்தைகளும் இப்படி பேட்டரிகளை முழுங்கும் வித்தியாசமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பேட்டரிகள் சில சமயங்களில் குழந்தையின் தொண்டையை அடைக்காமல் கடந்து செல்லும்.

ஆனால் அவை தொண்டையில் சிக்கிக் கொண்டால் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தும். ஏனென்றால் தொண்டையில் சிக்கிய பேட்டரிகளில் உமிழ்நீர் கலந்து மின்னோட்டத்தைத் தொடங்குகிறது. இது ஒரு இரசாயன எதிர்வினையைத் தூண்டுகிறது. இது உணவுக்குழாயை எரிக்கிறது. மேலும் கடுமையான திசு சேதம் மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

Related posts

Leave a Comment