கனவுகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கனவுகள் உங்கள் தூக்கத்தில் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை நம்மில் பலர் நினைத்திருப்போம்.
ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என்பது தான் உண்மை என பலர் நம்புகின்றார்கள். ஆனால், கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், வழிபாட்டுத் தலங்களில் திருமணம் செய்வது போல கனவு வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இயல்பாகவே அனைவருக்கும் தூங்கும் போது கனவுகள் வருவது வழக்கம். அது நல்லதாகவோ அல்லது கேட்டதாகவோ இருக்கலாம். ஒருவர் காணும் கனவு, நமது நிஜ வாழ்க்கையை பற்றி நிறைய கூறுகிறது என கனவு சாஸ்த்திர கூறுகிறது. திருமணம் குறித்த கனவுகள் வந்தால், ஒரு புதிய தொடக்கத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு கனவும் நம் வாழ்க்கையுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. கனவில் நாம் காணும் அனைத்தும் நம் எதிர்காலத்தைப் பற்றிய நல்ல அல்லது கெட்ட குறிப்பைக் கொடுக்கும்.
ஒரு தேவாலயம், மசூதி அல்லது பிற வழிபாட்டுத் தலங்களில் திருமணம் செய்வது போல கனவு வந்தால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே திருமணம் மாணவராக இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையப்போகிறீர்கள் என அர்த்தம். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் லாபகரமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
இதுவே வழிப்பாட்டு தளங்களில் வேறு ஒருவர் திருமணம் செய்வதை கண்டால், உங்களுக்கு வெற்றி வரப்போகிறது என்று அர்த்தம். ஆனால், அதை அடைய நீங்கள் தொடந்து முயற்சி செய்ய வேண்டும்.
அதுபோல ஒரு கடற்கரையில் திருமணம் நடப்பதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்களும் உங்கள் கூட்டாளியும் நிதி ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
அதே நேரத்தில், நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இணக்கமாக இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.