June 11, 2023
கனவுகள்

உங்கள் பற்கள் விழுவதை போன்று நீங்கள் கனவு கண்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா ?

நாம் தூங்கும் போது நாம் பார்க்கும் ஒவ்வொரு கனவுகளும் ஏதோ ஒன்றை நமக்கு மறைமுகமாக உணர்த்துகின்றது. ஏன் சில சமயங்களில் நாம் கண்ட கனவுகள் கூட நிஜமாகவே நடப்பதும் உண்டு. அப்படி இல்லையென்றால் அதற்குள் எதாவது ஒரு அர்த்தம் ஒளிந்திருப்பதும் உண்டு.

நமக்கு வரும் கனவுகளை கனவு சாஸ்திரப்படி பார்த்தால் பல அர்த்தங்கள் கூறப்பட்டுளது. நாம் தூங்கும்போது பற்கள் விழுவதை போன்ற கனவுகள் நிகழ்ந்தால் அது நமக்கு பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டுகிறது என்று கனவு சாஸ்திரம் தெரிவிக்கின்றன. அது என்ன என்பதை பற்றி இந்தப்பதிவில் நாம் பார்க்கலாம்…

உங்களையே அறியாமல் உங்கள் பற்கள் விழுவதை போன்ற கனவு நீங்கள் பார்த்தால், அதற்கு காரணம் உங்கள் வாழ்க்கையில் தோல்வி, வேலை இழப்பு அல்லது குடும்ப அழுத்தம் போன்ற சூழ்நிலைகளால் இந்த மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது. உங்களைவிட்டு எல்லாம் கைவிட்டு போனதுபோன்று ஒரு உணர்வு உங்களுக்கு வரும்.

நீங்கள் பணம் அல்லது குழந்தையை இழப்பது போன்ற உணர்வுடன் இருந்தால் அப்பொழுதும் உங்களுக்கு பற்கள் விழுகின்ற மாதிரியான கனவுகள் வரும். நம் மனதில் எழும் பயமே இந்த மாதிரியான கனவுகளுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

நீங்கள் வயதாகுவதை நினைத்து மன அழுத்தம் கொண்டு, அதே நினைவுடன் தூங்கினால் பல் விழுவதை போல் உங்களுக்கு கனவு வரும். வயது, உடல்நலம் மற்றும் வேறு சூழ்நிலைகளில் சரிவு ஏற்படும் போது இப்படிப்பட்ட கனவுகள் வரும்.

நீங்கள் அடிக்கடி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தை பற்றிய கவலை கொண்டு இருந்தாலும் உங்களுக்கு பற்கள் விழுவதை போன்ற கனவு எழும்.

உங்களுக்கு சேமிப்பு இல்லாமல் பணத் தட்டுப்பாடு இருந்தாலும் பற்கள் விழுவது போன்ற கனவுகள் வருமாம். அதனால் உங்களுக்குப் பணப் பிரச்சினைகள் இருக்கும்போது இதுபோன்ற கனவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் சுய நினைவை இழந்து தூக்கத்தில் இருக்கும் போது நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் இந்த மாதிரியான கனவுகளை ஏற்படுத்துகிறது.

Related posts

Leave a Comment