November 27, 2022
கனவுகள்

அடிக்கடி உங்க பழைய காதலி / காதலன் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்னு தெரியுமா…! ?

எவ்வளவுதான் மன மாற்றங்கள் ஏற்பட்டாலும் பழைய காதலை அல்லது முதல் காதலை மறந்து விட முடியாதுதான். ஆனால் அந்த காதலி/ காதலன் பற்றிய கனவுகள் உங்களைத் துரத்திக் கொண்டிருந்தால் அதற்கு அர்த்தம் என்ன என்பதை இந்தப்பதிவில் நாம் பார்க்கலாம்.

“காதல்” வாழ்க்கையில் தீர்க்க முடியாத ஒரு மர்மமான பிரச்சனையாகும். நம்மை வேண்டாம் என்று விட்டு சென்று விட்ட காதலியையோ அல்லது காதலனையோ அவர்கள் சென்ற பிறகும் நம் மனம் அவர்களை நினைத்து ஏங்கி கொண்டிருக்கும்.

பல நாட்களில் நாம் செய்யும் பல விஷயங்களில் அவர்கள் ஞாபகம் வந்து வந்து போகும். நாம் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுதான் நம் நினைவில் அடிக்கடி வந்து செல்லும். அப்போதுதான் நமக்கு புரியும் நினைவாற்றலின் சக்தி என்னவென்று.

நினைவுகள் என்பது சுகமானவை., நம் காதலியையோ அல்லது காதலனையோ பற்றிய நினைவு என்பது மிகவும் சுகமானவையாக இருக்கின்றது. ஆனால் நம் பழைய காதலியோ அல்லது காதலனின் நினைவு வரும் பொழுது நமக்கு வேதனையே மிஞ்சும். அதை நினைத்து நினைத்து பல நாட்கள் பலரும் துன்பப்பட்டு கொண்டிருப்பார்கள். இது மிகவும் கொடுமையான ஒரு விஷயமாகும். சிலநேரம் பலருக்கும் கனவில் கூட தங்கள் காதல் நினைவுக்கு வருவதாக கூறுகின்றனர். இது உங்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் பலருக்கும் நிகழக் கூடிய ஒன்றாகும்.

காதல் என்பது வாழ்க்கையில் எளிமையாக கடந்து போகக் கூடிய ஒரு காரியமாக இருந்திருந்தாலும் ஆனால் நம் மனதளவில் அவ்வளவு எளிதில் கடந்து போவது என்பது கடினம். உண்மையாக காதலித்து இருந்தால் அவர்களுக்காக மனதார உறுதியாக இருந்தால் அவர்களை விட்டு விலகுவது என்பது சாதாரண விஷயமல்ல.

அதேநேரம் அவர்களை விட்டு விலகிய பின்பும் அவர்கள் நினைவு வராமல் இருக்கவேண்டும் என்று நினைப்பது மிகவும் கடினமான விஷயம். உண்மையாக காதலித்து அவர்களின் நினைவு உங்களுக்கு வரவே இல்லை என்றால் உங்களின் காதல் பெரிதளவில் உண்மை இல்லை என்றே கூறலாம்.

உண்மையாக காதலித்த அனைவருக்கும் தங்களது பழைய காதலன் மற்றும் காதலியின் நினைவு வருவது அவ்வளவு எளிதில் தடுத்து விட முடியாது. சிலருக்கு தற்பொழுது வேறு காதலனோ காதலியோ இருந்து இருந்தாலும் பழைய காதலன் மற்றும் காதலி நினைவு வந்து கொண்டு இருக்கிறது என்று கூறுகின்றனர். இதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கின்றது.

உங்கள் காதலியுடன் திருமணம் அல்லது அவர்களுடன் பயணம் அல்லது அவர்களுடனான சந்திப்பு என அவர்களைப் பற்றிய எந்த கனவாக இருந்தாலும் அது அழகானதாகத்தான் இருக்கும். நீங்கள் ஒப்புக்கொள்ளா விட்டாலும் அதுதான் உண்மை.

பிரிவு என்பது மிகவும் கொடிய வார்த்தை. ஒருவருக்கொருவர் மனதார உண்மையாக காதலித்து கொண்டு, ஒருவரை விட்டு ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர் வாழவே முடியாத ஒரு சூழலில் பல நாட்கள் இருந்து கொண்டு, பிரிய வேண்டும் என்று கூறுவது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும்.

காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

இது பொதுவாக பலருக்கும் வரும் கனவுதான். இது அடிக்கடி சமீபத்தில் பிரிந்தவர்களுக்கு நிகழும். இவ்வாறு நிகழ்வது ஏதோ இருவருக்குள் பேசித்தீர்க்க கணக்கு பாக்கி இருக்கலாம்.

உங்கள் பழைய காதலி/காதலன் துரத்துவது போல் நீங்கள் கனவு கண்டால்., பழைய காதலி / காதலன் உங்களுடன் பேச முற்படுகிறார்., மீண்டும் காதல் உறவில் இணைய ஆசைப்படுகிறார்., ஆனால் உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை எனில் அவர் உங்களைத் துரத்துவதுபோல் கனவு வரலாம்.

உங்கள் பழைய காதலி/காதலன் இறந்துவிட்டது போல் கனவு கண்டால்., அது பாசிடிவ் அறிகுறியே. அதாவது உங்களுக்கு அவர் மீது மீண்டும் ஈர்ப்பு உண்டாகிறது அல்லது பழைய நினைவுகளை நினைத்து ஏங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் பழைய காதலி/காதலன் சந்திப்பது போல் கனவு கண்டால்., இது பொதுவாக பலருக்கும் வரும் கனவுதான். இது அடிக்கடி சமீபத்தில் பிரிந்தவர்களுக்கு நிகழும். இவ்வாறு நிகழ்வது ஏதோ இருவருக்குள் பேசித்தீர்க்க கணக்கு பாக்கி இருக்கலாம். அது இன்னும் முடியாமல் இருக்கலாம். அந்த பிரிவில் உங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியிருக்கலாம்.

உங்கள் பழைய காதலி/காதலன் திருமணம் செய்வது போல் கனவு கண்டால்., இதற்கு காரணம் அவருடன் நீங்கள் இணைய நினைக்கிறீர்கள் என்று இல்லை. புதிய பாதையை நோக்கி பயணிக்க நினைக்கிறீர்கள்., மறக்க நினைக்கிறீர்கள்., ஆழமான உறவை எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் பழைய காதலி/காதலன்னுடன் மீண்டும் அவருடன் காதல் கனவு தற்போது நீங்கள் வேறொரு காதலில் இருந்தாலும் அவருடன் காதல் உறவில் இருப்பதுபோல் நெருக்கமான கனவு கண்டால் தற்போதைய காதலில் ஏதோ பிரச்னை. பழைய காதல் வாழ்க்கையை தற்போதைய காதலுடன் ஒப்பிடுகிறீர்கள். ஏதோ விடுபடுவதுபோல் தோன்றினால் அவ்வாறு கனவு வரலாம்.

உங்கள் உள்ளத்தில் காதல் வேட்கை எழுவது போல் கனவு கண்டால் சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். அதே சமயத்தில் உங்களுக்கு சில எதிரிகளும் ஏற்படுவார்கள். பொறாமை காரணமாக, உங்கள் மீது பழியான வதந்திகளையும் அவர்கள் கிளப்பி விடுவார்கள். அது பற்றி நீங்கள் ஆத்திரம் அடையக் கூடாது. பொறுமையாக இருந்தால், அந்தப் பழிச் சொற்கள் தாமாகவே மறைந்துவிடும்.

உங்கள் காதனோடு நீங்கள் உல்லாசமாக பொழுது போக்குவதுபோல் கனவு கண்டால் உங்கள் மனதிற்குள் நீங்கள் வளர்த்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு முக்கியமான ஆசை நிறைவேறப் போகிறது. நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒரு திருமணச் செய்தி உங்களுக்குக் கிடைக்கப்போகிறது.

உங்கள் காதலியோடு நீங்கள் உல்லாசப் பொழுது போக்குவது போல் கனவு கண்டால் உங்கள் திருமணத்திற்குச் சில தடங்கல்கள் ஏற்பட்டு பின்பு அவை நீங்கிவிடும். அல்லது ஒரு முக்கியமான காரியத்தில் நீங்கள் சிறிது ஏமாற்றத்துக்கு ஆளாக நேரலாம். என்றாலும் முடிவில் நீங்கள் எண்ணியபடியே அது நடைபெற்று விடும்.

நீங்கள் காதலில் தோல்வியுற்றது போல் கனவு கண்டால் சில மறைமுகமான எதிரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் உங்களுக்கு விளங்கிவிடப் போகிறது.

உங்கள் காதலி அல்லாத வேறு இளம் பெண்களுடன் நீங்கள் காதல் பேச்சுகளைப் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் பயன் உள்ள காரியங்களைக் கவனிக்காமல், பயன் அற்ற காரியங்களிலேயே ஆர்வம் காட்டி வருகிறீர்கள். இதனால் நீங்கள் பிறகு பல இழப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். ஆகையால், இப்போதே உடனடியாக உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்., அத்துடன் உங்கள் தொல்லைகளும் தீர்த்துவிடப் போகின்றன.

Related posts

Leave a Comment